Archive For The “பொது” Category
ஒரு மாசத்துக்குச் சாப்பாட்டுக் கடையை அடைச்சுப் பூட்டிட்டுப் போனா, கால்டர்டேல் ஊரில் பல பேர் பட்டினியால் செத்துப் போயிடுவாங்க. அப்படி இல்லேன்னாலும் தெரிசா கடையில் விற்கும் வறுத்த மீன் எப்படி இருக்கும், கூடவே வறுவல் எவ்வளவு வரும், கொஞ்சம் போல புளிப்பும் கொஞ்சம் போல காரமுமாக அது எப்படி மீனோட வாடையோடு சமாதானமாகச் சேரும்னு எல்லாம் மறந்து விடலாம். இந்தப் படிக்கு வேறு மீனும் வறுவலும் விக்கற பெரிய கடை கால்டர்டேலில் இதுவரை இல்லை. நாம் கடையை…
பாகம்பிரியாளூர் பஞ்சாபகேச சிரௌதிகள் அவருக்குப் பழக்கமான தினசரி கடமையில் லயித்திருந்தார். வால்மீகி ராமாயணத்தில் இருந்து தினசரி விடிந்ததும் ஒரு அரை, காலே அரைக்கால் ஸ்லோகம் எடுத்து வைத்துக் கொண்டு அதை விஸ்தாரமாக ஒரு மணி நேரம் சொல்வார் அவர். சில நாள் ஒரு ஒற்றை வரி மட்டும் இப்படி எடுக்கப்பட்டு வால்மீகி சொன்னது, பவபூதி சொன்னது, தெலுங்கில் ஒருத்தர், மலையாளத்தில் இன்னொருத்தர், உருது ராமாயணம், எல்லாத்துக்கும் மேல் பஞ்சாபகேசனின் சொந்த சிந்தனையில் வந்தது என்று ஒரு மணி…
நாலு பக்க ஜன்னலும் மட்ட மல்லாக்கத் திறந்து வீடு முழுக்க வெளிச்சம் நிரம்பிக் கொண்டிருக்க, கற்பகம் சுருண்டு படுத்திருந்தாள். நீலகண்டன் போய்ச் சேர்ந்து ஒரு மாதமாகி விட்டது. போன மாதம் இந்தத் தேதிக்கு, இந்த நேரத்துக்குத் தான் அவனை மூங்கில் படுக்கையில் தூக்கிப் போய் எரித்து விட்டு வந்தார்கள். நீலகண்டனைக் கவனித்துக் கொள்ளும் மேல் நர்ஸ் லிங்கம் ஊருக்குப் போக லீவு எடுத்திருந்த நாள் அது. நடு ராத்திரிக்கு அப்புறம் எப்போதோ கூடத்துக்கும் பாத்ரூமுக்கும் நடுவில் பாலம்…
பாண்டேயைப் பார்க்காம பல்லுலே பச்சைத் தண்ணி படாது. லோகசுந்தரிப் பாட்டி ஹரித்துவார் ரயில்வே ஜங்க்ஷனில் இறங்கியதும் அறிவித்து விட்டாள். மாமி, இங்கே இருக்கப்பட்டவா எல்லாருமே பாண்டேக்கள். புரோகித வம்சம் தான். ஒருத்தனுக்கும் இன்னொருத்தனுக்கும் வித்யாசமெல்லாம் கிடையாது. பணம் பிடுங்கறது தான் எல்லோருக்கும் பொது அதர்மம். வைதீகாளே அப்படித்தானே. எல்லாம் தெரிந்த தோரணையில் ஆலாலசுந்தரமய்யர் மூக்கை நுழைக்க, பாட்டி அவரை முறைத்தாள். தெரிஞ்ச விஷயம்னா சொல்லுங்கோ. பாண்டே புரோகிதன்னு ஒரு வம்சமும் இல்லே. அதை முதல்லே தெரிஞ்சுக்குங்கோ. பாண்டேன்னாலே…
அச்சுதம் கேசவம் நாவலுக்கான தகவல் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஹரித்துவார் நகர அந்தணர்கள் – பாண்டா அல்லது பாண்டேக்கள்- பற்றி அறிந்து கொண்டேன். பாரதத்தின் பல இந்துக் குடும்பங்களின் வம்சாவளிச் செய்திகள் இந்தப் புரோகிதர்களின் பரம்பரையினரால் இன்னும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றனவாம். ஒவ்வொரு பாண்டே (பண்டிதர்-) குடும்பத்துக்கும் தேசத்தில் இந்த இந்தப் பிரதேசம் பற்றிய தகவல் காப்பாளார் என்று பொறுப்பு உண்டாம். ஹரித்துவார், ரிஷிகேஷ் தீர்த்த யாத்திரை போகிறவர்கள் முன்னோரை வழிபட்டு பித்ரு கடனையாற்ற அவரவருக்கு என்று விதிக்கப்பட்ட பாண்டே…
ஒரு ஊர்லே ஒரு பணக்காரர் இருந்தாராம். அவருக்கு ஒரே மகன். மகனுக்குப் பக்கத்து ஊர்லே நல்ல சம்பந்தம் கிடைச்சதாம். அங்கே போய்க் கல்யாணம் செஞ்சு மாப்பிள்ளை – பொண்ணை வீட்டுக்குக் கூட்டி வந்துட்டிருந்தாங்களாம். அப்போ மதிய நேரம். எல்லோருக்கும் நல்ல பசி. ஒரு பெரிய ஆல மரம் வழியிலே இருந்துச்சாம். அதுங் கீழே உட்கார்ந்து கட்டுச் சோத்து மூட்டையை அவுத்துச் சாப்பிட்டு வீட்டுக்குப் போய்ச் சேரலாம்னு அப்பாக்காரர் சொல்ல எல்லோரும் அப்படியே செய்யலாம்னு சாப்பிட உக்கார்ந்தாங்களாம். கல்யாணச்…