Archive For The “பொது” Category

சுரபி – சுஜாதா ரசனைப் பிணைப்பு : புது இலக்கிய அமைப்பு

By |

சுரபி – சுஜாதா ரசனைப் பிணைப்பு : புது இலக்கிய அமைப்பு

சுரபி சுஜாதா ரசனைப் பிணைப்பு. சுஜாதா சார் எழுத்துகளை நேசிக்கும் அவருடைய நண்பர்களும் அன்பர்களும் உருவாக்கும் அமைப்பு இது. சுஜாதா எழுத்தைக் கொண்டாடவும், அவர் நினைவில், தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துப் போகும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், அடுத்த தலைமுறைக்கு ’சுஜாதாவைக் கடத்தவும்’ ஏற்படுத்தப்படும், எந்த விதமான நுண்ணரசியலும் கலக்காத, ரசனையையும் அன்பையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்ட இலக்கிய அமைப்பு இது என்று சுரபி குழுவினர் சொல்கிறார்கள். சிறுகதை, நாவல், சயன்ஸ் ஃபிக்‌ஷன், அ-புனைகதை துறைகளில் குறிப்பிடத் தகுந்த ஆக்கங்களை…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 32 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம் :            அத்தியாயம் 32                           இரா.முருகன்

ஏர்ல் ஓஃப் லில்லி கேஸில். அல்லிக்கோட்டை பிரபு ஆல்பர்ட் மிடிங்டன் ரிச்சர்ட்சன் நடுராத்திரிக்கு வழக்கம்போல் எழுந்து கொண்டார். அவர் உலவப் புறப்பட வேண்டிய நேரம் அது. சலவை செய்த உடைகள் மர பீரோவில் இருப்பதை உறுதி செய்து கொண்டார் ஆல்பர்ட் பிரபு. அவை எப்போதும் அணியத் தயாராக நானூறு வருடமாகப் புதியதாக இருப்பவை. ஒரு ராத்திரி விடாமல் தினம் தூய்மையான ஆடைகளை அணிந்து, காலில் தூசு இல்லாமல் மின்னும் படியாகத் துலக்கிய பாதுகைகளையும் இட்டுக் கொண்டு அவர்…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 31 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம்   அத்தியாயம் 31                                            இரா.முருகன்

தட்டிய கதவைத் திறக்கப் போகிறவர் மேல் சட்டையில்லாத உடம்பில் நச்சுப் பாம்பு ஒன்றைத் தவழ விட்டுக் கொண்டு, தலைமுடியைச் சாய்வாக மடக்கிக் கட்டியவராக இருப்பார் என்று எதிர்பார்த்தாள் கொச்சு தெரிசா. அவர் ஆறடி உயர்ந்து, இடுப்பில் மிகச் சிறிய கருப்புத் துண்டை இறுகக் கட்டி, புகைக்கூண்டில் படிந்த கரும் சாம்பலை உடம்பு முழுவதும் பூசி இருப்பார் என்று அமேயர் பாதிரியார் ஏனோ ஊகித்திருந்தார். முசாபர், தன் முக ஜாடையில், கண்ணில் மையிட்டு, மணிக்கட்டில் மல்லிகைப் பூச்சரம் சுற்றியிருந்த…




Read more »

கற்றது மட்டும்

By |

கற்றது மட்டும்

இன்று சுஜாதா 80-வது பிறந்த நாள். இந்தக் கட்டுரை சற்றே சுருங்கிய வடிவத்தில் இன்றைய தி இந்து பத்திரிகையில் வெளியாகியுள்ளது. கற்றது இரா.முருகன் 1940-களின் இளைஞர்கள் கொடுத்து வைத்தவர்கள். தங்களைப் பிணைத்துக் கொண்டு சொந்த வாழ்க்கையின் அபத்தங்களைப் புறம் தள்ளிச் செயல்பட அவர்களுக்கு சுதந்திரப் போராட்டம் இருந்தது. 1960-களின் இளைஞர்கள் அதிர்ஷ்டசாலிகள். எல்லாத் துயரங்களையும் ஏமாற்றங்களையும் மறந்து முற்றாக ஈடுபட்டு அமிழ, இந்தி எதிர்ப்பு இயக்கம் இவர்களுக்குப் பற்றுக்கோடானது. ஆனால், 1950-களின் இளைஞர்கள்? இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். உணர்ச்சிகரமாகப்…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 30 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம்  : அத்தியாயம் 30                 இரா.முருகன்

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் முப்பது இரா.முருகன் அமேயர் பாதிரியார் மரக் கூண்டுக்கு வெளியே நின்று எக்கிப் பார்த்தார். தூசு உறிஞ்சும் யந்திரத்தை அவ்வப்போது காலால் இயக்கிக் கொண்டு நடக்கிற நடுவயதுப் பெண் தவிர உள்ளே யாருமே இல்லை. பெரிய பூப்போட்ட உடுப்பும் மேலே நீலக் கோட்டும் அணிந்த லத்தீன் அமெரிக்கப் பெண்மணி அவள். உலகமே கண்ணாடிக் கூண்டுக்கு அந்தப் பக்கம் திரண்டு நின்று அழைத்தாலும் அவள் திரும்பி என்ன என்று பார்க்க உத்தேசித்திருந்ததாகத் தெரியவில்லை. அந்த…




Read more »

ரொமன் பொலன்ஸ்கி பற்றியும் மற்றவையும் – எழுத்துக்காரன் குறிப்புகள் – ஏப்ரல் 2015

By |

ரொமன் பொலன்ஸ்கி பற்றியும் மற்றவையும் – எழுத்துக்காரன் குறிப்புகள் – ஏப்ரல் 2015

வகுப்பு எடுப்பதற்காக, எத்தனையோ வருடம் கழித்து மறுபடி ரொமன் பொலன்ஸ்கியின் (Repulsion) ரெபல்ஷன் திரைப் படம் பார்த்தேன் ஆழ்மனதில் பதிந்த வெறுப்பும், தனிமையும் மனதைக் குறக்களி காட்டி நிஜத்துக்கும் பிரமைக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க விடாமல் குழப்பி அந்தகாரத்தில் ஆழ்த்தும் கதை. கேதரின் டெனேயூ Catherine Deneuve அருமையாக சித்தப் பிரமை கண்ட கதாநாயகியாக நடித்திருப்பதைக் கண்டு இன்னொரு புகழ் பெற்ற பிரஞ்சு இயக்குனர் லூயி புனுவல் Luis Bunuel கேதரினுக்கு இதுபோல் மாறுதலான பெண் பாத்திரம் கொடுத்து,…




Read more »