Archive For The “பொது” Category
ஏர்போட்டுக்கு நான் கூட்டிப் போறேன். கார் வைத்திருந்த எல்லா நண்பர்களும் சங்கரனை விமான நிலையத்துக்குக் கூட்டிப் போவதில் ஆர்வம் காட்டினார்கள். என் டிரைவரை வரச் சொல்றேன் உங்க வீட்டுக்கு. எப்பக் கிளம்பறேன்னு மட்டும் சொல்லு. பிடார் ஜெயம்மாவுக்கு கார் ஓட்டத் தெரியாவிட்டாலும் சிநேகிதம் பெரிய விஷயம். அதுவும் சங்கரனை விட வசந்திக்கு ரொம்பவே வேண்டப் பட்டவள். வசந்தியும் சங்கரனும் விளக்கை எரிய விட்டுக் கொண்டு படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து, எல்லா வாய்ப்பு வசதிகளையும் அலசி ஆராய்ந்து, ஜெயம்மா…
அவ்வளவு பெரிய மனுஷராயிட்டோமா? வசந்தி கேட்டாள். காசு கொழுத்துடுத்தா? வெர்கீஸ் தாடையைச் சொறிந்து கொண்டு விசாரித்தான். மதராஸி லாட்டரி பம்பரா ஏதும் அடிச்சுதா? மேல்மாடி குடித்தனத்து குர்னாம்சிங் கிண்டினான். கொட்டு கொட்டுன்னு ஆகாசத்திலே இருந்து காசு கொட்டுதாக்கும். எனக்கும் கொஞ்சம் கொடுங்க சார். ஒய்ட் லக்கான் கோழி வாங்கி வளர்க்கறேன். ஒவ்வொரு முட்டையிலேயும் உங்க பேர் தான் எழுதி இருக்கும், ஆமா. ஆபீசில், பகல் சாப்பாடுக்கு முந்திய மதிய தரிசனமாக, உடம்பு வாடையடிக்கும் சிகப்பு ஸ்வெட்டர் களைந்து,…
மயிலை காளத்தி கடை ரோஸ்மில்க் பற்றி மந்தவெளி மோகனரும், மாம்பலம் முருகனும் வெண்பா அன்பு – அம்பு விட்டுக் கொண்டது யாதெனில் – காளத்தி கடை வெண்பாக்கள் (சற்று முன் வந்த மூன்றாவது, நான்காவது உட்பட) “மூளத்தீ கோடையாய், முப்புரத்தை வென்றபின்பு, காளத்தி நாதர் கடைகலந்த , -பாலொத்த, ரோஸ்மில்க் அருந்த ரகசியமாய் சென்றாராம், ஜுஸ்ஜில் ஜலபுராணம் ஜோர்”….கிரேசி மோகன்…. ———————————————————- அசுரர்க் களித்தாய் அரவுக்கும் வார்த்தாய் பசுமேய்த்த கோனார் ருசித்தார் விசுவனே தாளில் பணிந்துனக்குத் தந்தோம்…
முன்னால் பார்த்தால் டவுண் பஸ். பின்னால் இருந்து பார்த்தால் சுற்று வட்டாரக் கிராமப் பிரதேசத்துக்கு ஷட்டில் அடிக்கும் ரூட் பஸ். ரெண்டு அடையாளமும் தீர்க்கமாகத் தெரிய நிரம்பி வழிந்து கொண்டிருந்த வண்டி. அலுமினிய டப்பாவைத் தலைகீழாகக் கவிழ்த்து நாலு சக்கரம் மாட்டிய அது தான் நான் காலேஜ் போகவும் திரும்பவுமான வாகனம். பஸ்ஸின் வாசல்படியில் நின்றபடி ஏகப்பட்ட பேட்டை, குப்பம் பெயர்களைக் கூவிக் கொண்டு இருந்த நீலக் கைலிப் பையன் என்னைப் பார்த்ததும் காலேஜ் என்று கூவலில்…
தியூப்ளே வீதி – 3 இரா.முருகன் டவுண் ஹாலுக்கு நான் போனபோது ராத்திரி ஏழு மணி. ஒன்றும் இரண்டுமாக ஆண்கள் வர, தயங்கித் தயங்கி, தாட்டியான பெண்கள் ஏழெட்டுப் பேர் நீளப் பாவாடை அணிந்து ஒரு கூட்டமாக வந்து தனியாகவே உட்கார்ந்தார்கள். விக்தோ என்னிடம் முதல் காரியமாக அந்த டவுண்ஹாலின் பெயரை எப்படிச் சரியாகச் சொல்வது என்று சொல்லிக் கொடுத்தார். அவர் காட்டிய பெயர்ப் பலகையில் ‘Mairie Hotel De Ville’ என்று போட்டிருந்ததை பிரஞ்சில் பெப்பெப்பே…
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் முப்பத்தாறு இரா.முருகன் ஆலங்கட்டி மழையோடு மாலை கவிந்தது. புழுதி மண் மணக்க மணக்கத் தெருவே பண்டிகைக் கொண்டாட்டமாகக் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த இரைச்சல் ஜன்னல் வழியே கடந்து வந்து உள்ளே நிறைந்த போது, வைத்தாஸும் வாசலுக்கு வந்தான். இரண்டு கட்டிடம் தாண்டி மோட்டார் கார் ஒர்க்ஷாப் தரையில் சிதறிக் கிடந்த திருப்புளிகளும், சுத்தியலும், பழுது பார்க்கும் சர்தார் சாஹப்பின் நீலத் தலைப்பாகையும், தனக்குள் சிறிய வானவில் காட்டும் மசகெண்ணெய் தேங்கிய…