Archive For The “பொது” Category
ஆவக்கா ஊறுகா இருந்தாப் போடேன் பாட்டி. மொட்டை ரசஞ்சாதமா எப்படி சாப்பிடறது? திலீப் தட்டில் பரப்பி வைத்த தணுத்த சாதமும் மேலே மிதக்கும் ரச வண்டலுமாகத் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடி, வாசலைப் பார்த்துச் சத்தம் போட்டான். வச்சுண்டா வஞ்சகம் பண்றேன், ஏண்டா? ஊர்லே இருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்தது முழுக்க நீதான் தின்னு தீர்த்தே. ஜனனிக்கு ஒரு எவர்சில்வர் டப்பாலே போட்டுக் கொண்டு போய்க் கொடுடான்னு தாவாக்கட்டையைப் பிடிச்சுக் கெஞ்சினேன். போடி கெழவின்னு குண்டியைத் தட்டிண்டு…
– அலை ஓங்கி அடிக்குது அகல், தர்காவுக்கு இன்னொரு நாள் போகலாம். திலீப் அகல்யாவின் கையை இறுகப் பற்றியபடி நின்றான். அவள் இப்போது பிடிவாதம் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். நீ வரட்டா போ, நான் போயே தீருவேன் என்று அவள் ஓட வேண்டும். ஹை டைட் ஹை டைட் என்று ஒரு காவலர் அறிவித்துக் கொண்டே போக, அகல்யாவும் திலீபும் கடல் பாதையில் ஒருத்தர் பின்னால் ஒருத்தராக ஓட வேண்டும். எழுந்த அலையில் ரெண்டு பேரும்…
அவசரமாக எச்சில் முழுங்கினேன். கண் இதுக்கு மேலே விரிந்தால் உள்ளே இருந்து கண்விழிப் பாப்பா, நரம்பு, பெருமூளை, சிறு மூளை எல்லாம் வெளியே வந்து விழுந்து விடும். ’என்ன தம்பி, காசு எடுத்தாறலியா? பரவாயில்லே பெறகு கொடு’ நான் நீட்டிய ஜூனியர் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையைத் திரும்ப வாங்கிக் கொள்ளாமல் பெருந்தன்மையாக என்னிடமே தருகிறார் பாரதி வீதி கடைக்காரர். பத்திரிகை அட்டை முழுக்க ஈரம் ஜொலிக்கச் சாய்ந்து, ஒய்யாரமாக ரெண்டு துண்டு நீச்சல் உடையில் போஸ் கொடுத்தபடி ஒரு…
சனிக்கிழமை ஏகப்பட்ட சுவாரசியங்களைப் பற்றிய வாக்குறுதி கொடுத்தபடி விடிந்து கொண்டிருந்தது. நான் எழுந்ததும் முதலில் தினசரி காலண்டரைத்தான் பார்த்தேன். முழ நீளத்துக்கும் கூடுதலாக அந்த நாள்காட்டி நீளவாக்கில்தான் எப்போதும் நினைவு வரும். நீலமும் நீளமுமான அதன் அட்டை நெடுக விவேகானந்தர் கம்பீரமாகக் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார். கீழே கையகலத்துக்கு ஒவ்வொரு தினத்துக்குமான தேதி, கிழமை, ராகுகாலம், எமகண்டம், எல்லா ராசிக்கும் ராசிபலன், பொன்மொழி இதெல்லாம். என் ராசிக்கு இந்தத் தினத்தில் என்ன பலன் என்று நோக்கினேன்….
‘எலிசபெத் லாட்ஜ் சரியா இருக்கும். என்ன நினைக்கறே’. நான் சுவாரசியமாகக் காப்பி குடித்துக் கொண்டிருந்தேன். உலகத்திலேயே வேறே எந்த சர்க்காரும் எந்த நாட்டிலும், எந்த ஊரிலும் ஜனங்களுக்காகக் காப்பிக் கடை நடத்துவதாகத் தெரியவில்லை. அதுவும், இன்றைக்கு முழுக்க உட்கார்ந்து ஒரே ஒரு கப் காப்பியை மில்லிமீட்டர் செண்டிமீட்டராக, பீங்கான் கோப்பையே கரையும் அளவுக்கு எச்சில் பண்ணிக் குடிக்கிற நாகரீகம், குடிக்கிறவர்களை நேரமாச்சு என்று எழுப்பி விடாத பண்பாடு இதெல்லாம் இங்கே போல எந்த நாட்டிலும் இருக்காது. இந்த…
பகல் வெய்யில் பாழாகாமல் கணக்கு புரபசர் கால்குலஸ் வகுப்பில் லெய்பினிஸ் தியரத்தை விளக்கிக் கொண்டிருந்த போது, லெச்சு ஜன்னலுக்கு வெளியே நின்று சைகை காட்டினான். ஏதோ தலை போகிற அவசரம் அவனுக்கு. மொத்தமே இருபது பேருக்கு நடைபெறும் வகுப்பு என்பதால், பின் வரிசையை ஒட்டி இருக்கும் ஒருக்களித்த கதவைத் திறந்து இஷ்டம் போல வெளியே நழுவ முடியாது. உள்ளே திரும்பி வந்து, கும்பலில் ஒருத்தனாக உட்கார்ந்து, ரஃப் நோட்டில் பால் பாயிண்ட் பேனாவால், முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும்…