Archive For The “பொது” Category
செயிண்ட் லாரன் தெருவில் நுழைந்தபோது யாரோ மணி கேட்டார்கள். ‘ஒன்பது மணி முப்பது நிமிடம்’. இலங்கை வானொலிக் குரலில், இதைச் சொல்வதை விட இஷ்டமான காரியம் வேறெதுவும் இல்லை என்ற சிரத்தையோடு சைக்கிளை நிறுத்திச் சொன்னேன். அவர் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு அப்பால் போனார். ஒன்பது மணி முப்பது நிமிடம் ஆகும் போது சிகரெட் பற்ற வைக்க வேண்டுமென்று ஏற்கனவே முடிவு செய்திருக்கலாம். நொளினிகாந்த் மொஷாய் வீட்டு வாசல் தூரத்தில் இருந்தே அழகாகத் தெரிந்தது….
பூங்காக் காவலராக இருத்தல் அன்று எளிது. புகார் நகரச் சதுக்கத்தில் தீயோரை அடித்துத் தின்ற பிறகு உத்தியா வனத்தில் உலவும் பூதமாய் கற்புடைப் பெண்டிரை மிரட்டிப் பொழிந்து கலாசாரமும் காவல் காத்து பீடம் ஏறி ஓய்வு எடுக்கலாம். பூங்காக் காவலனாக இருத்தல் இன்று கடினம். செடிக்கும் கொடிக்கும் பொழிய வைத்திருக்கும் சன்னக் குழாயைக் கவிழ்த்து வளைத்து பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் பிடித்து ஒக்கலில் குழந்தையொடு நடக்கும் பெண்ணைப் பார்க்கவில்லை என நடிப்பது கடினம். கைவிரல் பிடித்து அப்பா…
தியூப்ளே வீதி உறங்கத் தொடங்கியிருந்தது. நேரு கஃபேயில் இந்த ராத்திரிக்குக் கடைசி கடைசியாகச் சாப்பிட்ட நாலு பேர், வாசலில் பாதி இறக்கி வைத்திருந்த ஷட்டருக்குக் கீழே குனிந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள். மாதா பழச்சாறு நிலையத்தில் பயபத்திரமாக மிக்சியைக் கழுவி, பட்டுத் துணியால் துடைத்து ஈரம் போக்குவது கண்ணில் பட்டது. தெருமுனை குப்பைத் தொட்டியில் கதம்பமாக வாசனை வீசும் பழத் தோலை அம்பாரமாகக் கொட்டிய கடைப் பையன் என்னைப் பார்த்துச் சிரித்தான் ’வருகிறான் உலகம் சுற்றும் வாலிபன்’….
Welcome to this interaction on theatrical plays. At the outset let me clarify that there is nothing that can be championed as absolutely right or rejected outright as pertinently wrong, in the myriad of responses we have received for all the six questions posed. These are the individual points of view (PoV) of our friends…
கேரளம் திலீப் நினைத்தது போல் இல்லை. பம்பாய் மாடுங்கா சங்கர மட வைதீகர்களும், ஓணத்துக்கு வாழைக் குலை வாங்க குடும்பத்தோடு கும்பலில் புகுந்து நடக்கும் செண்ட்ரல் ரயில்வே டிவிஷன் கிளார்க் நாயர்களும், ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதம் இருமுடி கட்டி விட செண்டை மேளத்தோடு வந்து சேரும் மாரார்களுமாக அவன் மனதில் எழுப்பியிருந்த உலகம் வேறு விதமாக இருந்தது. அந்த நிலப் பிரதேசத்தில் விடிய ரெண்டு மணி நேரம் முன்னால் நம்பூதிரிகள் ஆறு, குளம் என்று பார்த்து…
நொளினிகாந்த் சட்டர்ஜி மோஷாய் உள்ளே இருந்து காகிதமும் பென்சிலுமாகத் திரும்பி வந்தார். ’உனக்கு செஞ்சு வச்ச பொம்மை இன்னும் வர்ணம் காயலே. அடுப்பு பக்கம் வச்சிருக்கேன். கொஞ்சம் பொறு’. கயலை நோக்கிச் சொல்லி விட்டு, என்னை எழுந்திருக்கச் சொன்னார். பவழமல்லி மரத்தடியில் கயலோடு தப்புக் காரியம் செய்து விட்டதாக சந்தேகப் படுகிறாரோ. ஆமா, செய்தேன். அதற்குத் தண்டிக்க இந்த சுருட்டு சுந்தரம் பிள்ளை யார்? ’இப்படி வந்து இந்த பூக்கூடை பக்கமா நில்லு’. வாட ஆரம்பித்த பூக்கள்…