Archive For The “பொது” Category
கண் விழித்தபோது வெளியே குளிரக் குளிர மழை பெய்து கொண்டிருந்தது. ஒருக்களித்துத் திறந்து கொண்ட மேல் ஜன்னல் வழியே சின்னச் சரங்களாகச் சாரல் உள்ளே மிதந்து வந்து நனைத்தது,. தலை தொடங்கிக் கால் விரல் நுனி வரை தகித்து வெப்ப அலையுயர்த்தும் உடல் சூட்டைப் பகிர்ந்து கொண்டு நெருங்கிப் படுத்திருந்தாள் அமேலி. அவளை மேலும் இறுக அணைத்து நான் திரும்ப உறங்க முற்பட, அவள் குரல் மெதுவாகக் காதில் படிந்தது. ’கண்ணு, நீ ஹால்லே போய் படுத்துக்க’….
எழுத்து பயில்வதில் எழும் மேலதிக மகிழ்ச்சி வாழ்வு சார்ந்த புதினம் – பயோ ஃபிக்ஷன் – எழுதும்போது தான். நெம்பர் 40, ரெட்டைத் தெரு எழுதும் போது அனுபவித்தது இது. தியூப்ளே வீதி எழுதிக் கொண்டிருக்கும் போது இன்னும் கூடுதலாக அனுபவித்துக் கொண்டிருப்பதும் இதுவே. பதின்ம வயதின் இறுதியில் மறுபடி போய் நின்று கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது, மறுபடி வாழ வாய்ப்புக் கிடைத்த பரவசம். அன்று நீராடிய நதிகளில் எல்லாம் சென்று நீராட விரும்புகிறேன்…
நடராஜன், நீங்க கிளம்புங்க அப்பா என் பக்கம் திரும்பாமல் நேரே வின்செண்ட் நடராஜனைப் பார்த்தபடி சத்தமாகச் சொன்னார். சார், டியூட்டி முடிய நேரம். இருக்குதுங்களே.’ வின்செண்ட்.தயங்கித் தயங்கிச் சொன்னார். அவர் பார்வை என் பேரிலேயே முழுக்க இருந்தது. ‘இன்னிக்கு ஒரு நாள் சீக்கிரம் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்களேன்.. மத்தவங்களுக்கு உழைச்சு உழைச்சு என்னத்தைக் கண்டோம். நம்மை நாமே தான் பார்த்துக்கணும். இல்லையோ மரியாதை கெட்டு சாவோம்’. அப்பா அவச்சொல் சொல்லிக் கேட்டதே இல்லை. மனம் நொந்து…
இருட்டில் லலி தொலெந்தால் தெரு நோக்கி உருண்டு கொண்டிருந்தது ராலே சைக்கிள். முன்னால் சைக்கிள் பாரில் என் இறுக்கமான கை அணைப்பும், நெருக்கமும், ஏறும் உடல் தகிப்பும் பகிர்ந்த்படி அமேலி. அவள் தோளில் என் முகவாய் இதமாகப் பதிந்து, சிவந்த காது மடல்களை உதடுகள் வருடிக் கொண்டிருக்க, பெடல்களை இயந்திரமாக மிதித்தபடியே நான். ஐந்து நிமிடம் முந்திப் பார்த்த விபத்தை மனதில் திரும்பத் திரும்ப நிகழ்த்திப் பார்த்தபடி ஊர்ந்து கொண்டிருக்கிறேன். நிழற்பட்ங்களின் நீண்ட தொகுதி போல காட்சிகள்…
Chillu – On the occasion of the launch of the US edition of the play – The playwright speaks : My responses to various updates of Chillu actors posted in Chillu FB page collated and posted here to reach a wider audience Character : Shiela It may sound incredible but it is true – you…
டெலிபோன் ரொம்ப அழகாகச் சிணுங்கியது. கயலாக இருக்கும். அவள் கூப்பிட்டால் ஃபோனுக்குக் கூட குஷி தான். ’என்ன பண்ணிட்டு இருக்கே’? கிண்கிணி கிணிகிணியென்று குளிரக் குளிரத் தெறிக்கும் குரல். ’நாடகம் எழுத பிள்ளையார் சுழி போட்டேன் தேனே’. ‘தேனா? அது எங்க அக்கா’. ’சரி அவங்களையே கூப்பிட்டதா இருக்கட்டும’என்றேன் சாவதானமாக். ‘கூப்பிட மாட்டே.. பல்லைத் தட்டிக் கையிலே கொடுத்திடுவேன்.’ ‘செய் ..நமக்கு பிரஞ்சு கிஸ் பண்ண வசதியா இருக்கும்’.. ’உவ்வே .. ஏண்டா இப்படி புத்தி போகுது?…