Archive For The “பொது” Category

New: தீரர் இருந்த வீடு, இலக்கியம் வாழ்ந்த வீடு

By |

New: தீரர் இருந்த வீடு, இலக்கியம் வாழ்ந்த வீடு

வாழ்ந்திருந்ததற்கான எல்லா அடையாளமும் சிதைக்கப்பட்டு, அங்கங்கே குட்டிச் சுவர்களாக, சூனிய வெளியில் திறக்கும் வாசலாக, பிடுங்கி எடுத்து இரும்புக் கிராதியில் சாத்தி வைத்த மரக் கதவாக, இன்னொரு வீடு இறந்து கொண்டிருக்கிறது. தி.நகர் தணிகாசலம் வீதியில் இந்திப் பிரச்சார சபைக்கு எதிர்வசத்தில் நிமிர்ந்து கம்பீரமாக நின்ற வீடு அது. சற்றுமுன், இன்று காலை 7:00 மணிக்கு எடுத்த நிழற்படம் இது. வாசலில் இன்னும் வீட்டுக்கு உரிமையாளராக இருந்தவரின் பெயர் பொறித்திருக்கிறது. திரு. எஸ். சத்தியமூர்த்தி. ஆம், சுதந்திரப்…




Read more »

New: கம்பெனி லிமிடெட் – 1

By |

New: கம்பெனி லிமிடெட் – 1

சாஃப்ட்வேர் நிறுவனங்கள் சுவாரசியமானவை. அவ,ற்றில் கணிசமான ஊழியர்கள், பறந்து கொண்டும், ஓடிக் கொண்டும், நடந்து கொண்டும், தடுமாறிக் கொண்டுமிருக்கும் ப்ராஜக்ட்களில் வேலை பார்க்கிறவர்கள். காலையில் கேண்டீனுக்குப் போகும்போது சாந்தமும் கருணையுமாகப் புன்சிரித்து, வழியில் அங்கங்கே கனிவோடு குசலம் விசாரித்துப் போகிறவர்கள் சீராக இயங்கி வரும் ப்ராஜக்ட்களைச் சேர்ந்தவர்கள். பின்புறத்தில் அக்னி பற்றிப் பிடித்த அவசரத்தோடும் படபடப்போடும் நடக்கிறவர்கள் பற்றி எரியும் ப்ராஜக்ட் ஊழியர்கள். கள்ளச் சிரிப்போடு பவனி வருகிறவர்கள் முழுகும் கப்பலையும் கம்பெனியையும் கை கழுவி விட்டு,…




Read more »

New : நண்பர் மனுஷ்யபுத்ரனுக்கு ஒரு சிறு கடிதம்

By |

அன்பு மனுஷ் இது communication gap காரணமாக நிகழ்ந்த ஒன்று சுஜாதா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டேன். அவரைப் பற்றி இரண்டு வாரம் முன்பு தான் வாசகசாலை கூட்டத்தில் விரிவாகப் பேசியதால் இங்கும் அதே உரையை நிகழ்த்த விரும்பவில்லை. சுஜாதா பற்றிப் பேசப் போவதில்லை என்று தொடக்கத்திலேயே அறிவித்தது அதனால் தான். பரிசு பெற்ற என் நண்பர்கள் சி.எஸ்,கே, ஷான் இவர்களுக்கு வாழ்த்துச் சொல்லித்தான் தொடங்கினேன். மனதில் இருந்து வரும் வாழ்த்து பத்து வினாடி நிகழும்போது…




Read more »

வரவிருக்கும் ‘குளம்பியகக் குறிப்புகள்’ நூலில் இருந்து (சிறு கட்டுரைகள்)

By |

வரவிருக்கும் ‘குளம்பியகக் குறிப்புகள்’ நூலில் இருந்து (சிறு கட்டுரைகள்)

எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் ஒரு ரெபரன்ஸுக்காக நிக்கொலாய் ஆஸ்ட்ரொவெஸ்கியின் ‘How the steel was tempered’ சோவியத் சோஷலிச யதார்த்த நாவல் பிரதி தேவைப்பட்டது. அமேசன் மற்ற இணையக் கடைகள் எல்லாம் கண்டிப்பாக டாலர், ரூபாய் விலை (250 ரூ) சொல்ல, இலவச பி.டி.எப் ஒன்று கிட்டியது – ஆச்சரியகரமாக, ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி இணையத் தளத்தில் (அங்கே கட்சி இருப்பதே முதல் ஆச்சரியம்). தரவிறக்கி, கடைசி பக்கம் வரை வந்திருக்கிறதா என்று சரி பார்க்க, கடைசி…




Read more »

என்னைப் படித்து வாழும் தலைமுறை

By |

நீள் பட்டியல்களும், குறும் பட்டியல்களும் பட்டியலாளரின் போலியான வாசக அனுபவ விரிவைக் கேட்பவர்களுக்கு உணர்த்தவே தொடுக்கப் பட்டவை. பட்டியலில் இடம் பெறும் நூல்களின் ஆசிரியர்கள் முக்கியமில்லை. எண்ணங்களும் கற்பனையும் பெருவெளியில் மிதந்து கொண்டிருப்பவை. மனதை உயர்த்தி அவற்றைக் கைகொண்டு இன்னொரு எழுத்தாளர் இதே படைப்பை இதனினும் உன்னதமாக உருவாக்கியிருக்க முடியும். பட்டியல்கள் நிலையானவை அல்ல. தொடுக்கும்போதே மாறுவதே நல்ல பட்டியல். Catalogues are never the ultimate. They are always transient. இல்லாத எழுத்தாளர்களின் எழுதாத…




Read more »

New: Era Mu writes 4 : அருண் கொலட்கர் – மறு பார்வையில்

By |

New: Era Mu writes 4 :  அருண் கொலட்கர் – மறு பார்வையில்

அருண் கொலட்கர் ஆங்கிலம் மற்றும் மராட்டியில் கவிதை எழுதிய இருமொழிக் கவிஞர். அவருடைய அனைத்து ஆங்கிலக் கவிதைகளையும், கவிஞரும், இலக்கிய விமர்சகருமான அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா தொகுத்து Arun Kolatkar Collected Poems in English என்ற புத்தகமாக்கியிருக்கிறார். இங்கிலாந்து (நார்த் அம்பர்லேண்ட்) பதிப்பு இது. அருண் கொலட்கரின் இந்த மொத்தத் தொகுப்பைப் படிக்கும் போது அவருடைய கவிதைப் பெருவெளியும், இலக்கியத் தேடலும், கவிதையும் வாழ்க்கையும் பாதித்து வழி நடத்திப் போன அகப் பயணத்தின் சுவடுகளும் புலனாகின்றன….




Read more »