Archive For The “பொது” Category
சென்னை – விஸ்வரூபம் நாவலில் இருந்து – 1 (ஏப்ரல் 8 1904 சோபகிருது பங்குனி 27 வெள்ளி) மாட்சிமையும் மகா வல்லமையும் பொருந்திய, பூவுலகம் ஒரு குடைக்கீழ் அடக்கி ஆளும் சக்ரவர்த்திகள். சக்ரவர்த்திகளின் பிரதானியாக வீற்றிருந்து இந்த பாரத பூமியின் திலகமான மதராஸ் பட்டணத்தையும் அதையொட்டி விஸ்தாரமாகப் பரந்து விரிந்த தட்சிணப் பிரதேசமான நல்லுலகத்தையும் உய்விக்க வந்த சாட்சாத் மகாவிட்டுணு அவதாரமான கவ்னர் துரையவர்கள். இந்த மேலோரின் பாதாரவிந்த கமலங்களில் தெண்டனிட்டு, மதராஸ் பட்டணம் மயிலாப்பூர்…
நீங்க எத்தனை காலமா தேவ ஊழியம் செஞ்சுக்கிட்டிருக்கீங்க. கிறிஸ்துநாதர் மாதிரி ப்ராக்டிகல் ஆக எதாவது எங்களுக்கு சொல்லுங்க ஃபாதர்
By Era Murukan |
An excerpt from the translation done today போப்பாண்டவர்கள். போப்பாண்டவர்கள். பிலாத்தோஸ் பாதிரியார் வசித்த சர்ச் மேல்தளத் தாழ்வாரச் சுவரில் வரிசை வரிசையாகப் பல போப்பாண்டவர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. முதல் படம் அப்போஸ்தலரான புனித பத்ரோஸ் என்ற பேதுருப் புனிதரின் ஓவியம். அடுத்து முதல் போப்பாண்டவர்களின் சிறு ஓவியங்களைச் சேர்த்து உருவாக்கிய பெரிய படம். பதிமூன்றாம் லியோ போப்பாண்டவரின் படத்திலிருந்து தொடங்கி, மற்ற ஓவியங்கள் பெரியதாக இருந்தன. பதினொன்றாம் ப்யூஸ் ஓவியத்தோடு போப்பாண்டவர்களின் படங்கள் முடிந்தன….
Excerpts from translation y’day “சொல்லு ஜெசிக்கா”, பாவமன்னிப்புக் கூண்டின் உள்ளே இருந்து பிலாத்தோஸ் பாதிரியார் சொன்னார். ”என் சரீரத்தில் பாவம் நடந்துச்சு” “ஙூம்” “எனக்கு பெரிசா பிராயச்சித்தம் சொல்லுங்க சாமி”. “என்ன பாவம் செஞ்சே ஜெசிக்கா?” “நாலஞ்சு மாசம் முந்தி நான் டியூஷன் படிக்க மலாக்கா ஹௌசில் புஷ்பாங்கதன்மாஸ்டர் ரூமுக்கு போயிருந்தேன். நான் கணக்குலே வீக்”. “அதனாலே?” “புஷ்பாங்கதன்மாஸ்டர் என்னைத் தொட்டார்”, நான் சொன்னேன். பிலாத்தோஸ் பாதிரியார் மௌனமாக இருந்தார். “முதல்லே கால் விரலைத் தொட்டார்….
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்து போரில் ஈடுபடுத்திய போர் விமானங்களை, அம்பாசிடர் காரை விட அளவு குறைந்த இந்திய நாட் விமானங்கள் துரத்தியடித்து, சாஸ்திரியை உயரமான பிரதமர் ஆக்கின
By Era Murukan |
A small excerpt from today’s translation செப்டம்பர் மாதம் ஒரு ராத்திரியில் லந்தன்பத்தேரிக்கு முன்னால் கிடக்கும் காயல் பரப்புக்கு மேலும், போர்ட் கொச்சிக்கு வரம்பு கட்டும் கடலுக்கு மேலும் விரியும், பருவமழை துடைத்து வைத்த கொச்சியின் ஆகாயம் தீப்பிடித்தது. கரையில் இருந்தும், கப்பல்களில் இருந்தும் தொடர்ந்து சுடப்பட்ட, புகைத் தடம் கிளப்பி உயரப்பாயும் ட்ரேசர் புல்லட் வெடிகுண்டுகள் வானத்தில் சற்று நேரம் அசங்காது நின்று, பச்சையும், சிவப்பும், மஞ்சளும் கலந்த வெளிச்சத்தைச் சுற்றும் பரப்பின. கரையோர…
Puthagan – New Short story : Era.Murukan – Published in Theeranadhi August 2017 (தீராநதி ஆகஸ்ட் 2017 இதழில் பிரசுரமானது) நாங்கள் போய்ச் சேர்ந்தபோது நூல்நிலைய வாசலில் சிறகுகள் இறைந்து கிடந்தன. நூலகத்தை ஒட்டியிருந்த வீட்டில் ஒரு பெண்குரல் பக்திப் பாடல் ஒன்றை சினிமா மெட்டில் பாட, ஏழெட்டுக் குழந்தைக் குரல்கள் ஒவ்வொரு அடியாகப் பின் தொடர்ந்து கொண்டிருந்தன. நூலகக் கதவு அடைத்திருந்தது. ‘நகரசபை உறுப்பினர்கள் வந்து விட்டார்கள்’. எங்களைப் பார்த்து வழியோடு…
கட்சி உடைஞ்சா மற்றதை எல்லாம் பங்கு வச்சுப் பிரிச்சுக்கிட்ட மாதிரி உயிர் கொடுத்த தியாகிகளையும் பாகப் பிரிவினை செஞ்சுக்க வேணாமா
By Era Murukan |
(இன்று மொழிபெயர்த்ததில் ஒரு சிறு பகுதி) போய் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளாமல் புத்தகக்கடையை விட்டுப் புறப்பட்டார் ராகவன். ஆஸ்பத்திரி வீதியில் ‘ஹோட்டல் டெர்மினஸ்’ உள்ளே வைத்திருந்த மதுக்கடைக்கு நடந்தார் அவர். இருட்டும் வரை அங்கே குடித்துக் கொண்டிருந்தார். படகுத்துறைக்குத் திரும்ப நடக்கும்போது யாரோ அவரை ஆஸ்பத்திரிக்கு முன்னால் தடுத்து நிறுத்திக் கேட்டார்கள் : “ஒரு பாசிங்ஷோ சிகரெட் இருக்குமா?”. “ஷெனாய் தோழர்”, ராகவன்மாஸ்டர் ஷெனாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். ஷெனாய் மௌனமாக நின்றார். ராகவன் அவரைக்…