Archive For The “பொது” Category
செண்ட்ரல் ஸ்டேஷனை எந்த வருடமோ இந்திக் காரர்களுக்கு எழுதி வைத்தார்கள் இந்திமிகுந்த அங்கே புறப்படாது தமிழூர் எழும்பூர் நீங்கும் நூற்றொண்ணு மதராஸ் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வண்டி. இலங்கை செல்லப் படகுகள் ஏற தனுஷ்கோடிவரை போனதால் இதனைப் போட்மெயில் என்போம் எங்கள் பூமியில் தனுஷ்கோடியைக் கடல் கொண்டு போச்சு. ராத்திரி ஏழரை எழும்பூர் விட்டு வண்டி கிளம்பினால் பெட்டி பெட்டியாய் இட்லிப் பொட்டலம் திறந்து வைத்து வேகம் தின்பதே சீலமென்று தலைமுறையாகப் பழக்கம் உண்டு. காய்ந்து போன பூரிக்…
ஜோல்னாப் பைகளின் காலம் முடிந்ததாம் யார் சொன்னார்? ஃபூகோ என்றும் காஃப்கா என்றும் போர்ஹே என்றும் சிமன் தெ புவாவென்றும் ஃப்ரான்ஸ்வா சாகன் என்றும் சிமமண்டெ என்கோஸி அடிசெ என்றும் தெரிய வேண்டிய பெயர்களை எல்லாம் சரியான உச்சரிப்பில் கற்றுக் கொடுத்தது என் ஜோல்னாப் பைதான். ழானர் என்றும் ழீன்பால் சாத்ரெ என்றும் ழான் கொக்தொ என்றும் வெற்றிலை சீவல் குதப்பிய வாயொடு சொல்வது போல பேசச் சொன்னதும் சத்தியமாக ஜோல்னாப் பைதான். அப்பத்தா என்பதுபோல் ரெபதொ***…
சின்னச் சின்ன சந்தோஷங்களில் இதுவும் உண்டெனக்கு – பழைய தீபாவளி மலர்களை பக்கம் பக்கமாய்ப் புரட்டுவது காகிதப் புத்தகம் கிடைப்பது அரிது டிஜிட்டல் இதழ்களே நமக்கு விதித்தது, நாற்பதுகளின் புத்தகம் கிட்டினால் காலயந்திரம் கிடைத்த மகிழ்ச்சி; நானில்லா பழையதோர் ஆண்டுக்கு ஓசையின்றி சென்று வரலாம். எல்லா தெய்வமும் வந்திருந்து பஞ்சவர்ணமும் தேசலாய்ப் பூசி நிற்பர் சாய்ந்து முன்னட்டையில் இன்னும் யாரும் அமரவில்லை. பாகவதர் ஹரிதாஸ் வருதென்றும் சின்னப்பா ஜெகதலப்ரதாபன் ரிலீஸென்றும் தீபாவளி வாழ்த்தோடு விளம்பரங்கள்; திண்தோள் மான்கண்ணி…
இரண்டு தலைமுறை முன்னால் வாழ்க்கை எளிது உலக யுத்தமும் யாரோ நடத்திய சுதந்திரப் போரும் இலக்கணம் வழுவா இந்து பேப்பரும் எருமைப் பாலில் பில்டர் காப்பியும் நெரிசல் இல்லாத் தெருக்களுமாக. இரண்டு தலைமுறை முன்னால் எல்லாவற்றிலும் குடையே பிரதானம் கல்யாண வீட்டுக்கும் இல்லாத வீட்டுக்கும் கக்கத்தில் குடையோடு நடந்து செல்வர். முந்தி வந்ததாக மௌனமாய் முழங்கிப் பந்தியில் இடம்பிடித்தார் குடையைப் போட்டு. தோளில் மாட்டிய குடையோடு ஒருசிலர் ஓடிச் சாடினர் ஒன்றும் ஆகலையாம். வெய்யில் மிகுந்தால் வீழ்ந்து…
நான்காம் மாடியில் நாங்கள் வசிக்கிறோம். மின்தூக்கி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும். எத்தனை படிகள் மொத்தமாய்? மின்சாரம் நின்றுபோய் படியேறும் போது எண்ணிப் பார்க்கணும். அவ்வப்போது கரெண்ட் போனாலும் படிகளை எண்ணுவது பாதியில் இருந்துதான். கீழிருந்து மேலே போகவோ மேலிருந்து இறங்கவோ பொத்தான் அழுத்தி அழைக்கும்போது எங்கோ லிப்ட் தேங்கியிருந்தால் எரிச்சலும் கோபமும் பொங்கிவரும். பேப்பர் பையனா, பாக்கெட்பால் பாட்டியா கறிகாய்க்காரனா கூரியர் மற்றும் தீனி கொண்டுதரும் சேவையாளனா விருந்தாட வந்த யாரோ ஒருவரா எந்த மாடியில்…
கண்ணனவன் சொன்னபடி இன்னும் வரவில்லை கண்கள் வழிவைத்துக் காத்திருந்தாள் – கன்னி மரத்தில் மறைந்தது மான்விழி சைக்கிள் மறத்தை மறைக்கும் மனம். மல்லி விலையேற்றம் மாங்காயும் ஏறுமுகம் சொல்லுநேரம் உள்ளிகாணோம் கூடியாச்சு – முள்ளங்கி தக்காளி இத்தனையேன் வெண்பா தளைதட்டும் தக்காளி கால்கிலோ தா. இளநீர் விற்பவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வாசலில் மெல்ல விளிக்கச் சலுகை. நீர்க்காய் தர நிபந்தனையோடு. தூக்குப் பாத்திரத்தில் வாங்கிப் போகிறவள் புகார் செய்வது, ”நேற்று உப்புநீர்” இன்று இனிக்குமோ இளநீர்க்காரன் அரிவாள்…