Archive For The “பொது” Category
இந்த மாதம் எழுதியது, மொழிபெயர்த்தது ஆகக் குறைவுதான். நிறையப் படித்தேன், படித்துக் கொண்டிருக்கிறேன். போன வாரம் கிருஷ்ணகான சபாவில் ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ நிகழ்ச்சியில் அன்புக்குரிய பேராசிரியர் வவேசு அவர்களுடன் சக்தி வை.கோவிந்தன் பற்றி, அவை நிறைந்த கலந்துரையாடல். நிகழ்ச்சியில் பேச, சக்தி கோவிந்தன் நடத்திய பத்திரிகைப் படைப்புகளின் தொகுப்பான ‘சக்தி களஞ்சியம்’ இரண்டு தொகுதிகளை – கிட்டத்தட்ட 1500 பக்கம் – படிக்க வேண்டியிருந்தது. கூடவே திரு பழ.அதியமான் எழுதிய ‘சக்தி வை.கோவிந்தன் – தமிழின்…
A short story from my collection, The Polymorph The Bottle The ferry was on the other bank of the river. At least twenty, all men, were there at the boat jetty along with Kesavan, waiting for the ferry to arrive. Except Kesavan and a shabby-looking elderly person with crutches held under his arms, others had…
நன்றி வாடை (இரா.முருகன் – தீராநதி செப்டெம்பர் 2019) சங்கரன் மார்ச் 13, 2001 நடுராத்திரிக்கு புது கருநீல சூட்டும், வெள்ளைச் சட்டையோடு கருப்பு நிற டையும் அணிந்து, மினுமினுக்கும் ஷூக்களோடு மீனம்பாக்கம் விமானநிலையம் வந்து சேர்ந்தான். முப்பது வயதுக்காரன். அதியதிகாலை ஒன்றரை மணிக்கு சிங்கப்பூர் வழியாக எங்கேயோ போகும் சர்வதேச விமானத்தில் ஜன்னல் இருக்கை அவனுக்கு. அடுத்த இருக்கை சாரு என்ற சாருமதிக்கானது. சாரு முப்பத்தைந்து வயது அசிஸ்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட். சங்கரனுக்கு இரண்டு லெவல்…
தீவு ”இறங்கலாம்”, விமான உபசரிணிப்பெண் அபியைத் தோளில் தட்டி எழுப்பினாள். அவன் கண் விழித்தபோது விமானத்துக்குள் ஜன்னல்கள் மூடி, எல்லா விளக்குகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான். அவனை இறக்கிவிட அவசரம் காட்டிய உபசரிணியோடு நின்ற வெள்ளைத் தொப்பி அணிந்த மத்திய வயசுக்காரனும் ‘எழுந்திருங்கள்’ என்று அபிக்குப் புரிய வைக்கக் கையை உயர்த்திக் காட்டினான். விமானியாக இருக்கும். “இது எந்த ஏர்போர்ட்? நான் ஜகார்த்தாவுக்கு போகிற பயணி. லண்டனிலிருந்து வருகிறவன்”, அபி தூக்கக் கலக்கத்தோடு சொல்லியபடி கோட் பாக்கெட்டில்…
பத்து மணிக்கு தெற்கே போக சாயந்திரம் ஐந்தரைக்கு வடக்கே போக ரெண்டே ரயில் ஓடும் ஸ்டேஷன் எனக்குத் தெரியும் இருந்தது ஓர்காலம். தெற்கு போவது ராமேஸ்வரத்துக்கு குளித்துத் தொழுதவர் திரும்ப சென்னை செல்வர் வடக்கே போட்மெயில் என்று சிறப்புப் பெயர் ரெண்டு வண்டிக்கும் உண்டு. இலங்கை முனையைத் தொட்டு ஓடி முன்னொரு காலம் இயங்கியதாம் தனுஷ்கோடியைக் கடல்கொண்டு போக இலங்கை செல்ல ரயில்வண்டி இல்லை. ஆக் மொத்தம் இரண்டே ரயில்கள் சிலநாள் சென்னையில் இருந்தோ இன்னும் வடக்கே…
நீல பத்மநாபனின் புதிய கவிதைத் தொகுதி ‘சாயங்கால மேகங்கள்’ விருட்சம் பதிப்பு திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் – வெளியீட்டு விழா 23 ஜூலை 2019 செவ்வாய்க்கிழமை மலையாளத்தில் எழுதப்பட்டு நீல.பத்மநாபன் தமிழாக்கம் செய்த நூல் இது. இரு மொழியிலும் ஒரே தலைப்பு தான். நூல் மலையாளத்திலும் தமிழிலும் வெளியாகியுள்ளது ‘சாயங்கால மேகங்கள்’ – நீல பத்மநாபனின் கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய ‘ரசனைக் குறிப்பு’ – // முதுமை ஒரு மனநிலை. அது உருவத்தை மாற்றுகிறது. நடையைத்…