Archive For The “பொது” Category
புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 2 பகுதிகள் இரா.முருகன் 1944 டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை அவள் தேவையில்லாமல் கண் சிமிட்டினாள். அதுவும் சரியென்று பொங்கலில் ஒரு தேக்கரண்டி வாயில் அண்ணாந்து போட்டுச் சுவைத்தபடி எழுந்து போய் வாசல் கதவை மூடிவிட்டு வந்தேன். “இதெதுக்கு இப்போ கதவடைச்சு பகல்லே ப்ளாக் அவுட்? இலவசம்னா எந்த நேரத்திலேயும் கேட்குமா?”. அவள் என்னைத் தள்ளி விட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து வாரப் பத்திரிகை படிக்க ஆரம்பித்தாள். நான் எச்சில் கையோடு…
புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 1 இரா.முருகன் நாவல் மரத்தின் கிளையில் உட்கார்ந்திருந்த யட்சன் இந்தக் கதையை எழுதி விட்டு வேறே வேலை பார் என்று சொன்னான். நான் மரத்தடியில் பழம் கிடக்கிறதா என்று பார்க்கப் போனபோது அவன் கக்கரமுக்கர என்று கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி என்னை அழைத்தான் – ராமோஜி ஓய் ராமோஜி! சற்று கவனியுமையா. எனக்குத் தமிழ் சரியாகப் பேசவே தெரியாதபோது என்னத்தை எழுத என்று கேட்டேன் தரையில் உதிர்ந்து விழுந்த…
நண்பர் ஸ்ரீதர் நாராயணனின் கத்திக்காரன் தொகுப்புக்கு நான் அளித்த முன்னுரை எழுத எப்படியோ, படிக்க, நாவலை விடச் சிறுகதைத் தொகுப்பு சிலாக்கியமானது. முன்னும் பின்னுமாக அங்கங்கே ஒவ்வொரு கதையாகப் படித்து அவ்வப்போது நிறுத்தித் தொடரும் வசதி நாவலில் கிட்டாது. காலமும், களமும், கருப்பொருளும் நடையும் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமைந்திருந்தால், வாசிப்பனுபவம் எந்தக் குறையுமின்றிப் பிரவகிக்கும். ஸ்ரீதர் நாராயணனுக்குக் கைவந்த கலையாகச் சிறுகதை ஊற்றெடுத்துப் பொங்கிப் பிரவகிக்கிறது. இந்தச் சிறுகதைத் தொகுப்பு பற்றி அவர் சொல்வது…
நுழையும்போதே சல்யூட் அடித்த காவல்காரர் சின்னச் சிரிப்போடு அப்புறம் கொடுங்க என்றார் நக்கலான சென்னைச் சிரிப்பில்லை நேசமான செட்டிநாட்டுப் புன்னகை. அந்தக்கால சோவியத் நாட்டு ஏரோஃப்ளோட் விமான சேவையில் கண்டிப்பான உபசரிணிபோல் ஓவர்கோட் பெண்கள் வாழை இலைவிரித்த மேசைமுன்னே இருந்துண்ண இடம் சுட்டினர். உளுந்து வடையா உழுந்து வடையா பட்டிமன்றம் நீண்டுபோக வேகம் உண்ணும் நான் பார்த்த நாலு பேரும் இன்னும் தொலைவில் ஒரு சிலரும் மென்றபடிக்கிருந்தது வடைகளே என்ன வேண்டும் சொல்லும்முன் எனக்கும் கொணர்ந்தார் வடைகள்…
மறதி குறித்த மனக் குமைச்சலோடு வார இறுதிக் காலை விடிந்தது. வெண்பாப் போட்டியில் வென்றாருக்கு வாக்குத் தத்தம் செய்தபடி ரெவ்வெண்டு போத்தல் கேரளப் படைப்பு புளியிஞ்சி வாங்கி அனுப்பினேனிலன் இஞ்சியோடு கண்ணாடிச் சில்லும் ஊறுகாயாவதாய் படித்ததாலஃது. சொல்ல மறந்தேன் சேதி எவர்க்கும். பாண்டி பஜார் பாலாஜி பவனத்தில் ஊரே ருசிக்கும் காப்பி அருந்த அழைப்பு விடுத்தேன் நண்பர் கவிஞர்க்கு அழைப்பை மறந்து அசோகநகர் குடிபெயர்ந்தேன். நிகனொர் பர்ரா அகவிதை என்றவர் போக. ஊர்தி என்று இலக்கிய சஞ்சிகை…
அப்புறம் ஒரு நாள் பார்க்கலாம் என்று காணாதிருந்த கல்லூரித் தோழி நேற்று மறைந்த செய்தி வந்தது. இத்தனை ஆண்டுகளில் எத்தனை முறை நினைத்துக் கொண்டேன் அவளை? ஒருதடவை ராப்பகல் மயங்கி நீளும் விமானப் பயணத்தில் ஞாபகம் வந்தாள்; பக்கத்து இருக்கையில் அவள் ஜாடையில் யாரோ உறங்கியபடிக்கு. வேம்பநாட்டுக் காயலில் மழை வந்த பிற்பகலில் படகேறி கடல் முகத்தில் திரும்புகையில் கடல் பறவை கூவலோடு அவள் குரலும் எழுந்து தேய்ந்தது அருகே நகரும் படகிலிருந்து. பனிபொழியும் காலைநேரம் பிழைக்கப்போன…