Archive For The “பொது” Category
இந்த நடிகர்களை எல்லாம் விட சிறப்பாக செயல்படுகிற ஒரு அற்புதமான உத்தியோகஸ்தரை உங்கள் ரேடியோ ஸ்டேஷன் சம்பளத்துக்கு எடுத்திருக்கிறது என்பது பற்றி நீங்கள் நிஜமாகவே பெருமைப்படலாம். ஸ்ரீவில்லிப்புத்தூர் பலவேசம் பிள்ளை அவர்கள் தான் அந்த அற்புதமான கலைஞர். காலையில் பெயர் அறிவிக்காமல் நிலைய வித்வான் என்று பொதுவாக அறிவித்தாலும் ஸ்ரீவிலி.பலவேசம் குரல் அல்லா அல்லா என்றோ கிருஷ்ணா கிருஷ்ணா என்றோ, சமயத்தில் அடுத்தடுத்துமோ உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும். செய்தி விமர்சனத்தில் புதிதாகப் பதவி ஏற்ற பிரிட்டீஷ் பிரதமர்…
an excerpt from the forthcoming novel ‘RAMOJIUM’ – Kumbakonam 1935 ”என்ன பேசினாலும் கோபப்பட வேணாம், பீமா நல்லவன், முதலில் கோபப்படுவான்.. அப்புறம் வழிக்கு வந்துவிடுவான். திட்டினாலும் பொறுமை காக்கவும்” என்று ஐந்து நிமிட உபதேசம் செய்து ஓடினாள் என் ரத்னா. இரண்டு நாள் கழித்து பிடாரிகுளம் தெருவில் சகலமானவர்களுக்கு டீ உபசாரம் நடத்திக் களைத்து நடந்து வருகிறபோது வாடகை சைக்கிளில் கூடவே வந்தான். வாங்களேன், காத்தாட போய்ட்டு வரலாம், பின்னாலே ஏறிக்குங்க என்றான்…
விருந்துகளைக் குறையுங்கள் என்று அடுத்த சிக்கனம் பேணுவோம் புத்திமதி. இந்த யுத்தம் வந்தது முதல்கொண்டு விருந்து என்ற ஒரு சமாசாரத்தையே மறந்து போயிருக்கிறோமே. குறைக்க இனி என்ன இருக்கிறது? எங்கள் மதறாஸ் பிரசிடெண்சி மாகாணத்தில் கெஸ்ட் கண்ட்ரோல் சட்டம் போட்டிருக்கிறார்கள் விருந்து என்று முப்பது பேருக்கு மேல் கூப்பிடக்கூடாது. அதில் விருந்து கொடுக்கிறவர்களும் அவர்கள் குடும்பமும் அடக்கம். முப்பது பேருக்கும் தலா ஒரு சின்ன பெரி பிஸ்கட், ஆளுக்கொரு வாழைப்பழம், ஒரு துண்டு கேக் இப்படிக்கூட ஒண்ணும்…
அடுத்த சிக்கன யோஜனை, சிக்கனம் பேண சாப்பாட்டைக் குறைப்பீர். என் பெண்டாட்டி மிசிஸ் அகல்யா பாய் விட்டோபா ராவ் தினசரி சொல்வது இது. வயிறு பருத்து தொந்தி விழுந்ததால் குறைக்க காலையில் நடக்கச் சொல்லி அலுத்துப் போய், கசரத் செய்யச்சொல்லி அதுவும் நடக்காமல் தீனியைக் குறைக்கச் சொல்கிறாள். ஆனால் சர்க்கார் இதை சிக்கனம் பேணும் நடவடிக்கையாகக் காணுகிறதே. வேடிக்கை தான். சர்க்கார் சொல்கிறதே என்று ராத்திரி சாப்பிடாமல் தூங்கப் போய், அரைத் தூக்கத்தில் செம்பா ஹோட்டலில் ஜாஸ்தி…
an excerpt from my forthcoming novel RAMOJIUM : Kumbakonam 1935 நான் சாரங்கபாணி கோவிலை நோக்கி நடந்தபோது வெங்கோப ராவ் அண்ட் பார்ட்டி வெளியேறிக் கொண்டிருந்தார்கள். ராமாராவ் மாமா பின்னாலேயே போனார். கோவிலுக்குப் போய் விட்டு ஏழு மணிக்குக் கிளம்பிய போது, கமலா பாய் பிரகாரத்தில் தூணை ஒட்டி உட்கார்ந்து எங்கோ வெறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவள் பிரமை பிடித்தது போல் இருந்தாள். துக்காம்பாளையத் தெருவுக்கு வந்தபோது என்னமோ தோன்ற கங்கா வீட்டுக்குப் படியேறினேன்….
ராமோஜியம் நாவலில் இருந்து – கடிதங்கள் பகுதி கும்பகோணம் விட்டோபா ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து. 1945-ல் தமிழில் எழுதப்பட்டது இந்தக் கடிதம் // சிக்கனம் பேணுவோம் என்று வரும் சர்க்கார் விளம்பரத்தில் அடுத்து சொல்கிறது வீட்டில் நிம்மதியை ஒரு வழி பார்த்து விடும். வீட்டில் அதிகமான அறைகளை வாடகைக்கு விடுங்கள். இது அந்த சிக்கன யோஜனை. என் வீட்டில், கும்பகோணம் தெருவில் பல வீடுகளில் உள்ளது போல திண்ணையோடு வாசல், ஒரு ரேழி,…