Archive For The “பொது” Category
நான் தொண்டையைக் கனைத்துக்கொண்டு நாயக்கரிடம் கேட்டேன் – ”உங்கள் அவசரத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது உங்களுக்கு ஸ்த்ரிகளின் சுஸ்வரமான கச்சேரிக்கு வாசிப்பதில் இஷ்டம் தான். அப்புறம் என்னாத்துக்கு காப்பியம், வெண்பா, வெண்டைக்கா எல்லாம்?” ”அதென்ன அப்படிச் சொல்லிட்டீங்க? தெருவிலே ஒரு பொண்ணு எதிர்லே வந்தாலே ஒதுங்கி வழி விட்டுத் திரும்பி சுவரைப் பார்த்துட்டு நிற்பேன்.. நமக்கு ஒத்து வர்றதில்லேங்க” என்றார் நாயக்கர். ”ஏன் சார், நேரே பார்த்துட்டு நடந்தா மரியாதையா, திரும்பி பிருஷ்டத்தை காட்டறது நாகரீகமா?” என்று…
ராமோஜியம் – ஒரு புதிய அத்தியாயம் 1945 – தொடக்கப் பகுதி அது ஏன் கல்யாணமான அடுத்த வருஷமே பெண்டாட்டியை வயிற்றைத் தள்ள வைத்து அடுத்த தலைமுறை பிறந்து வர ஆவன செய்ய வேண்டும் என்று புருஷனையும் பெண்ஜாதியையும் மற்றவர்கள் எல்லோரும் மறைமுகமாகவோ நேரடியாகவோ நிர்பந்திக்கிறார்கள் என்று தெரியவில்லை. சில பேர் இன்னும் மோசம், கல்யாணப் பத்திரிகையைக் கையில் வாங்கிக் கொண்டதுமே பத்து மாதக் கணக்கைப் போட ஆரம்பித்து, ஞாபகமாக விசாரிக்கப் புறப்பட்டு வந்துவிடுகிறார்கள். கல்யாணம் முடிந்து…
“நல்ல வேளை அடிபடலே.. ஊமைக் காயம் தான்.. மயக்கமும் தெளிஞ்சாச்சு.. எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு தூக்க மாத்திரை கொடுத்திருக்கேன் .. தூங்கினா விட்டுடுங்க.. காலையிலே ஜம்முனு எழுந்திருச்சிடுவார்“ டாக்டர் நாயர் பெரிய மீசையை நீவிக்கொண்டு ரத்னாவையும் தெலக்ஸையும் பார்த்துச் சொன்னார். நான் அவர் மீசை மறைத்ததை எக்கிக் கடந்து ரம்பையையும் மேனகையையும் பார்வையால் அள்ளிப் பருகினேன். ”சாரி சார், ஆறரை மணிக்கு உங்க வீட்டுக்கும் ஜோசியர் வீட்டுக்கும் போய்ட்டு வரலாம்னு கிளம்பினா, பெரிய கை ப்ரட்யூசர் ஒருத்தர்…
கடமை தவறாத ஏ ஆர் பி வார்டனாக விசில் ஊதிக்கொண்டு இரண்டு ரவுண்ட் அடிப்பதற்குள் நாலு தடவை ஜோசியர் தட்டுப்பட்டு, ஏதாவது தெரிஞ்சுதா என்று கேட்டார். ஜப்பான் விமானம் குண்டு போட வந்தால் கூட அவருக்கு நியூஸ் ஆகாது. அற்ப சங்கைக்குக்கூட ஒதுங்கமாட்டாமல் அவரை புலனடக்கி நிறுத்தி, எதிர்பார்க்க வைத்துக் கட்டிப் போட்டிருக்கிறாள் புவி. யார் வீட்டு ரேடியோவிலோ அரியக்குடி நேர்த்தியாக ’எல்லே இளங்கிளியே’ என்று பியாகடை ராகத்தில் திருப்பாவை விஸ்தாரமாகப் பாடும் சத்தம், அமைதியான ராத்திரியில்…
”என்னாச்சு, அத்தங்கா மறந்துட்டாளா?” பந்துலு சம்சாரம் தூணைப் பார்த்துக் கேட்டாள். அங்கே பந்துலு இருந்தாலும் மௌனம் தான் பதிலாகக் வந்திருக்கும். எந்த நேரமும் வேட்டியை நனைக்கிற அவசரத்தோடு ராமண்ணா ஜோசியரும் என் வீட்டு வாசலுக்கு வந்து, ’எங்கே காணோம்? இன்னும் வரல்லியே’ என்று கூப்பாடு போட்டார். நான் என்ன, வந்த தெலக்ஸை பறிமுதல் செய்து வீட்டில் பதுக்கிவிட்டா வரல்லே என்கிறேன்? ராத்திரி ஏழரைக்கு டெல்லியில் செய்தி அறிக்கை படிக்கிற சத்தம் எல்லா வீட்டு ரேடியோக்களிலும் இருந்து கொர்ர்…
சாயந்திரம் நாலு மணிக்கு கடை கட்டி வைத்துக் கிளம்ப ஆயத்தமாக முகம் கழுவி வந்தபோது பந்துலு சார் என் நாற்காலிக்கு எதிர் நாற்காலியில் காத்துக் கொண்டிருந்தார். “சார், கிளம்பிக்கிட்டே இருக்கேன்” என்று சமாதானமாகச் சொல்ல, அவர் அமைதியாகக் கூறிய பதில் – “சாரி ராமோஜி, இன்னிலேயிருந்து ஏ ஆர் பி நாலு மணிக்கு வீட்டுக்குப் போக ஸ்பெஷல் பெர்மிஷன் ரத்தாயிடுத்து.. எப்பவும் போல அஞ்சு, அஞ்சரை, ஆறு, ஏழுக்கு போய்க்கலாம் … நான் ரோமாண்டி துரை மீட்டிங்க்…