Archive For The “பொது” Category
துரை உட்கார்ந்தபடிக்கே தூங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, கிரிமாசி பண்டிதன் போய் வணங்கி நின்றான். ”ஆகாரம் வந்தாச்சு, அதானே?” துரை புகைக் குழாயை சித்தம் செய்யும்படி ஒரு சிப்பாயியை ஏவியபடி விசாரித்தார். ”ஆமாம், அது தவிரவும் கபுறு உண்டு மகாப்ரபோ”. எய்ட் த காம்ப் வந்திருந்து சொன்னான். ”என்னவோ அது, சொல்லிப்போடு” கவர்னர் அவனை நோக்கினார். எய்ட் த கேம்ப்பை முந்திக்கொண்டு கிரிமாசி பண்டிதன் கபுறு சொன்னான்- ”துரைசானி வர முடியவில்லையாம். கான்சொலர் முசியெ தொத்தல் துரைகளோட பெண்ஜாதி…
ராமோஜி ஒவ்வொருத்தருக்கும் முக வார்த்தையாக இனி இப்படி செய்யாதீர் என்று சொன்னபோது அதில் ரெண்டு பேர் கூத்துக்கு மத்தளமும் மிருதங்கமும் இசைக்கிறவர்கள் என்றும் இன்னொருத்தன் புல்லாங்குழல் வாசிக்கிறவன் என்றும் தெரிந்தது. அரியாங்குப்பம் பட்டாமணியக்காரர் மகளுக்குத் திரண்டுகுளி வீட்டு விசேஷத்தில் நேற்று ராத்திரி வினிகை (கச்சேரி) நடத்த வந்து திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்களாம். தடபுடலான நேற்றைய ராத்திரி விருந்து இந்தக் காலை நேரத்தில் வயிற்றோடு பிரியாவிடை பெற்று வெளியேற அவசரப்பட்டதால் உடனடியாகச் சாலையோரமாகக் குத்த வைத்ததாகச் சொன்னார்கள் அவர்கள் எல்லோரும்….
விடிந்ததும் ஒரு குதிரை வீரன் ராமோஜி வீட்டு வாசலில் பரபரப்போடு குதிரை வண்டியை நிறுத்தி குதிரையைக் கனைத்துச் சத்தமிட வைத்தான். என்ன கூச்சல் என்று ராமோஜி பார்க்க, கவர்னரின் உத்தியோகஸ்தன் சொன்னான் – ”பண்டிதரே, உங்களை துரை உடனே கூட்டி வரச் சொன்னார். முரட்டாண்டிச் சாவடியில் தான் இருக்கிறார். வாரும், நேரம் தப்பினால் அவருக்கு கோபம் வரும்”. அவசர அவசரமாக ராமோஜியை வண்டியில் அடைத்துக்கொண்டு அவன் புறப்பட்டுப் போனான். கவிராயரிடன் சொல்லிக் கொள்ளாமலேயே புறப்பட்டாகி விட்டது. அத்தனை…
நாவல் ராமோஜியம் – ராமோசி ராயன், அருணாசல கவிராயரின் ராமநாடக கீர்த்தனை கேட்ட புதுவை இரவு – வருடம் 1745
”நல்லது, தெய்வானுக்ரஹம் இருந்தால் சீக்கிரம் மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லி ராமோஜி நடக்க ஆரம்பிக்க கவிராயர் அவனை நிறுத்தினார். ”வாருங்கள், நீங்கள் போகுமிடத்துக்கு உங்களைக் கொண்டு போய் விட்டுப் போகிறேன்”, கவிராயர் வண்டிக்குள் உட்கார இடம் ஒதுக்கிக் கொடுத்தார். ”நீங்கள் வில்லியனூரில் இருந்து வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்”, ராமோஜி வண்டியில் போனபடி.அவரிடம் விசாரித்தான். ”நான் இந்தப் பக்கமே இல்லை. தென்காசியில் வசித்து வருகிறேன். பிள்ளையாரிடம் நூலை வாசித்துக்காட்டி, இயன்றால் சில கீர்த்தனைகளைப் பாடிக்காட்டிப் போகலாம் என்று வந்தேன்”….
”பெரியவர்கள் மன்னிக்கணும். இந்த பெயர் விஷயத்தில் துரை உறுதியாக இருக்கறபடியால் தான், நானும் கொஞ்ச நாள் உங்கள் பெயரைச் சொல்லி தற்காலிகமாக சர்க்கார் உத்தியோகஸ்தனாக இருக்கேனே” என்றான் ராமோஜி. அதுவும் மெத்தச் சரிதான் என்றவர் போன வாரம் விட்ட இடத்திலிருந்து நாள் குறிப்பு எழுதலாமா என்று கேட்டார். ஒரு வாரம் எழுதலியே என்றான் ராமோஜி. “அது ரொம்ப இல்லை, ராஜாங்கம் இல்லாத சம்பவங்கள் தான் எழுத வேண்டியது. ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும்” என்றார் அவர்….
ராமோஜி தரையைப் பார்த்தபடி நின்றிருந்தான். துரை அவனை நோக்கினார். ”நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்?” துரை விசாரித்தார். இன்னொரு இளநீர் வெட்டப்பட்டு அவர் வாய்க்குள் தாரையாக வழிந்து கொண்டிருந்தது. மரியாதைக்குக் கூட இரும் என்றோ இளநீர் குடிக்கிறீரோ என்றோ விசாரிக்கவில்லை துரை. அது கிடக்குது. வந்தது வந்தாய், நான் கேட்கக் கேட்கப் பதில் சொல்லிக்கொண்டு என் காலைப் பிடித்து விடு என்று சொல்லாமல் இருந்தாரே, அதுவரை விசேஷம்தான். “புடவைக் கிடங்கு வைத்து சாயம் தோய்த்து அந்நிய நாடுகளில்…