Archive For The “பொது” Category
ராமோஜியம் நாவலில் இருந்து – ருக்மணி குக்கர் வாங்கப்போன போது ——————————————- தொடர்ந்து நான்கு நாள் திங்களிலிருந்து வியாழன் வரை ஒரு மணி நேரம் ஆபீசில் இருந்து முன்னால் வந்தேன். எலக்ட்ரிக் குக்கரே மனதிலும் புத்தியிலும் திடமாக உட்கார்ந்திருந்தது. எனக்குத் தெரிந்து புவனா வீட்டில் கூட எலக்ட்ரிக் குக்கரோ ஹீட்டரோ, அவ்வளவு ஏன், தண்ணீர் சுட வைக்கும் மின்சார கெட்டிலோ கூட கிடையாது. எலக்ட்ரிக் ஹீட்டர் என்றும் எலக்ட்ரிக் குக்கர் என்றும் அழைக்கப்பட்ட அந்த சாதனம் அரையடிக்கு…
போஸ்ட் ஆபீசிலிருந்து கூப்பிடறாங்க, என்னவா இருக்கும்? ரத்னா நான் ஆபீஸ் வேலைகளில் மும்முரமாக இருந்தபோது ஜோசியர் வீட்டிலிருந்து போன் பேசினாள். அவள் இதற்கு முன் ஃபோனில் என்னோடு பேசியதே இல்லை என்பதால் குரல் வித்தியாசமாகக் கொஞ்சம் கிரீச்சிட்டு ஒலித்ததாகத் தோன்றியது. பதட்டத்தோடு அவள் நேரில் பேசுவதே இல்லை என்பதால், என்ன அவசரமோ, சொல்ல முடியவில்லையோ என்று எனக்கும் படபடப்பு புரசைவாக்கம் போஸ்ட் ஆபீஸ் தானே என்று கேட்டேன். ஆமாம் என்றாள். “நான் அவங்க கிட்டே பேசிட்டு உன்னை…
ராமோஜியம் நாவல் நூலாக ஆயத்தங்கள் தொடங்கின. கோவிலில் இந்த நாட்டிய நாடகம் அரங்கேற்றத்தை உத்தேசித்து லட்சார்ச்சனையும் சகல தீப தரிசனமும் ஏற்பாடு ஆகியுள்ளது. திருமுறை சொல்லும் ஆறு ஓதுவாரமூர்த்திகளும் நாள் முழுக்க தேவாரம் பாடவும் வகை செய்திருக்கிறது. ஆனந்தரங்கர் பரிவட்டமும் புஷ்பமாலையும் பொன்னாடை வஸ்திரமும் கொடுத்து அருணாசல கவிராயருக்கு மரியாதை செய்யவும் ஆவன செய்யப்படுகின்றன. அதெல்லாம் எப்படிப் போகிறதென்று ராமோஜி தெரிந்து கொள்ள வேணும். பொற்கொல்லர் தங்கப்பனாசாரி கவிராயருக்கு மரியாதை செய்ய அளிக்க, மூணு பவுன் தங்கத்தைத்…
பிள்ளைவாள் கருணையாலும், அவருடைய மற்றும் அவருக்கு ஆப்தர்களின் தன சகாயத்தாலும் ஈஸ்வரன் தர்மராஜா தெருவில் ஒன்றும், அம்பலத்தாடியார் மடத்து தெருவில் இன்னொன்றுமாக வீடுகளை வாடகைக்குப் பிடித்திருந்தார்கள். தர்மராஜா தெரு வீட்டு உப்பரிகையில் தனி கமரா (அறை) கொடுத்து கவிராயரை இருக்கவும் பண்ணியானது. அந்த வீட்டில் சங்கீதக்காரர்கள் எல்லோரும் தங்கியிருந்தார்கள். அம்பலத்தாடியார் தெரு வீட்டில் நாடகத்தில் ஆடப் போகும் அரம்பையர்களும் பாடப் போகும் வனிதைகளும் தங்கிக் கொண்டார்கள். இரண்டு வீட்டுக்கும் சேர்த்து அம்பலத்தாடியார் தெரு வீட்டில் மூன்று வேளை…
அடுத்த இரண்டு வாரங்களில் ஏகப்பட்ட முக்கிய நிகழ்ச்சிகள் அரங்கேறின. அருணாசல கவிராயரின் கீர்த்தனைகள் படியெடுக்கப்பட்டு ராமோஜியிடம் வழங்கப்பட்டன. ஆனந்தரங்கம் பிள்ளை கவர்னரை வந்து பார்க்கவும் கபுறு சொல்லவும் கேட்கவும் நேரம் செலவழித்தாலும் துரைக்கு உடம்பு சுகவீனம் கண்டதால் அதெல்லாம் மறுபடி நிறுத்திப் போடப்பட, வேண்டிய ஓய்வு பிள்ளைவாளுக்கும் கிட்டியது. கபுறு கேட்பது, பதிவது, ரொம்ப முக்கியமானதை துரைக்கு லிகிதமாக எழுதி ராமோஜி மூலம் சேர்ப்பித்து பதிலையும் அதேபடிக்கு வாங்கி வருவது என்று ஒரு சீலம் கடைப்பிடிப்பானது. ராமோஜி…
கிராமத்திலிருந்து இரண்டு மாட்டு வண்டிகளைச் சித்தம் செய்து ராமோஜியும் நட்டுவனாரும் ஒரு வண்டியிலும், ரத்னாவும் புவியும் இன்னொன்றிலும் பயணப்பட்டார்கள். வழியில் அருணாசலக் கவிராயரையும் அம்பலத்தாடியார் மடத்துத் தெருவில் பார்த்தார்கள். நல்ல வேளை அவர் வேறெங்கும் பயணப்பட்டிருக்கவில்லை. பக்கத்து வைசியாள் தெருவில் ராமோஜி வீட்டுக்கு வர முடியுமா என்று கேட்க அவர் வந்தேன் என்றார் சந்தோஷமாக. அவ்விதமே அவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு, ராமோஜி வண்டிக்குப் பக்கத்தில் வார்த்தை சொல்லியபடி நடந்து வர, எல்லோருமாக வந்து சேர்ந்தார்கள் ராமோஜி கவிராயரிடம்…