Archive For The “பொது” Category

1975 நாவலில் இருந்து – மேன்ஷன் சுதந்திரங்கள்

By |

1975 நாவலில் இருந்து – மேன்ஷன் சுதந்திரங்கள்

1975 நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி தி நகர் பஸ் ஸ்டாண்டில் பதின்மூன்றாம் நெம்பர் பஸ்ஸை பிடிப்பதைவிட கஷ்டமான வேலை கிடையாது. திருவல்லிக்கேணி போகும் பஸ் அது. காலை நேரத்தில் எல்லாக் கூட்டமும் அண்ணாசாலைக்கு அலைபாய்ந்து கொண்டிருக்கும். அப்போதும் திருவல்லிக்கேணி பஸ் நிரம்பி வழியும். மதியம் மீதி ரூட் பஸ் எல்லாம் சும்மா போகும். என்ன காரணத்துக்காகவோ மாம்பலம் மனுஷர்கள் வேகாத வெயில் என்றாலும் திருவல்லிக்கேணி போவார்கள். சாயந்திரம் பீச் போகிற கூட்டம். அதற்கு நாள்,…




Read more »

1975 – நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி

By |

Excerpt from my novel 1975 அரசியல் சட்ட திருத்தம் 38, 39,40,41 என்று தினசரி ஒன்றாகச் சட்டம் போட்டு சர்வ சக்தி வாய்ந்ததாக மத்திய அரசை மாற்றியமைத்துக் கொண்டிருப்பதை எல்லாம் மக்களாட்சியின் சாதனை என்று வானொலி சொல்ல, கவிஞர்கள் சளைக்காமல் வாழ்த்துக் கவிதை எழுதித்தர, சேர்ந்த இசை என்று ஆகாசவாணியில் நடுப்பகலில் கூட்டமாகப் பாடப்பட்டது. எதிர்க்கட்சிக்காரர்களான பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதானதையோ, தலைமறைவானதையோ மறந்தும் வானொலி சொல்லவில்லை. பத்திரிகைகளில் அந்த சாதாரண செய்தி ஏதும் வராமல்…




Read more »

நாவல் 1975 – வசந்தா ராகத்தில் டூயட் பாடி ஒரு 20 அம்சக் காதல்

By |

Excerpts from my novel 1975 கேளு நாயரும் அவர் மகள் பாருகுட்டியும் ஒரு வெள்ளிக்கிழமை காலையில் என்னைத் தேடி வீட்டுக்கு வந்திருக்காவிட்டால் நான் இந்த அத்தியாயத்தை எழுதியிருக்கப் போவதில்லை. கேளு நாயரைப் பற்றி அப்புறம் சொல்லிக் கொள்ளலாம்தானே? பாருகுட்டியைக் கவனிக்கலாம். பாருக்குட்டி இல்லை. பாருகுட்டி. பெயருக்கும் குட்டிக்கும் நடுவே மெய்யெழுத்தெல்லாம் அண்டாது. மலையாளப் பெண் பெயர்களுக்கு ஒட்டாக ஒரு குட்டியைச் சேர்த்து பாருகுட்டி, அம்முகுட்டி, ஜானுகுட்டி, மோலிகுட்டி. இன்னும் செல்லமாக மாலூட்டி என்ற மாலுகுட்டி.. இப்படி…




Read more »

இரண்டு பக்கங்கள் – 1975 நாவலில் இருந்து

By |

“கோவிந்தன் மேன்ஷன் தானே, வாங்க நானும் அந்தப் பக்கம் தான் வரேன்”. ஒதுங்கி நின்று உஸ்மான் ரோடு நெரிசலை ரசித்துக் கொண்டிருந்த ஜிப்பாக்காரர், என்னோடு நடக்க ஆரம்பித்தார். நான் உடனே உஷாரானேன். “சார், ஏதோ தப்பா என்னை நினைச்சுட்டீங்க போல. நான் அன்னிக்கு பீச்சிலே நோட்டீஸை பொறுக்கி எடுத்துப் போனது உண்மைதான். ஆனா அதுக்கு மேலே என்னால் எமர்ஜென்சி எதிர்ப்பு காட்ட முடியாது. நீங்க வந்து இருக்கவோ, தடை செஞ்சிருக்கற புத்தகம் கொண்டு வந்து விநியோகம் பண்ண…




Read more »

ராமோஜியம் – 1941 : புருஷன் யுக புருஷனான கதை

By |

புருஷன் யுக புருஷனானதில் குபீரெனப் பொங்கிப் பிரவகித்து ஏற்பட்ட முகமும் அகமும் கொள்ளாத சந்தோஷத்தோடு என் பிடியிலிருந்து விலகி மறுபடியும் சமையல்கட்டுக்கு ஓடினாள். பத்து நிமிடத்தில் திரும்புவதற்குள் அவள் படித்துக் கொண்டிருந்த வாரப் பத்திரிகையைப் புரட்டினேன். சிசுக்களின் ஈரல் குலைக்கட்டி குணமாக ஜம்மியின் லிவர் க்யூர், தரமான நரசூஸ் காப்பி, நடிகை சோபனா சமரத் சதா உபயோகிக்கும் தெலக்ஸ் சோப், கண்ட்ரோல் விலைக்கு சர்ஜிக்கல் எஃகில் உருவாக்கிய விட்டா பிளேடு, பழைய சாக்குப் பைகள் நியாயமான விலைக்கு…




Read more »

வெளிவர இருக்கும் ராமோஜியம் நாவலில் இருந்து -ஏர்ரைட் வார்டன் ராமோஜி ராவ் 1941

By |

“பாடுங்கோ சார்” மத்தளநாராயண ராவ் கஞ்சிரா வாசித்தபடி பக்கத்தில் வந்து ரெண்டு பேரையும் உற்சாகப்படுத்த, நாயக்கரின் மிருதங்கம் பேச ஆரம்பித்தது. நான் ராவின் கஞ்சிராவை ஒரு நிமிடம் வாங்கி வாசித்ததை நாயக்கர் ரசித்தார். “ஏது டேப் வாசிக்க வரும்போல” என்றார் அவர். “எல்லாம் தேர்ந்த கைதான்.. அவங்க அப்பா மராட்டி அபங் பாடினா,, ஆஹா” என்றபடி மத்தளநாராயண ராவ்ஜி கஞ்சிராவை என்னிடமிருந்து திரும்ப வாங்கிக் கொண்டு முன்னால் போனார். கூட்டமே இல்லாத சொர்க்கத்தில் ஏதோ ஒரு உத்தியானவனத்தில்…




Read more »