Archive For The “பொது” Category
இது டவுண்ஹால் வீதி.நேரே நடந்து போனா ஆவணி மூல வீதி. அது மேலக் கோபுரத்துக்கு கொண்டு போய் விடும். மிஞ்சிப் போனா பத்து நிமிஷம். தெரு வேடிக்கை பூரா பார்த்துக்கிட்டு போங்க. கேமரா உண்டுதானே? நல்ல யோசனை தான். நடக்கத் தலைப்பட்டாள் கொச்சு தெரிசா. காமிராவை எடுத்து வந்து போகிற இடம் எல்லாம் படம் பிடிக்கும் சுற்றுப் பயணிகளுக்கான ஆவலும் ஆர்வமும் போன இடம் தெரியவில்லை. சொந்த ஊரில், சொந்த வீட்டில் மூலை முடுக்கெல்லாம் படம் எடுத்து…
என் ‘வாழ்ந்து போதீரே’ நாவலில் இருந்து – நவராத்திரியோ, பொங்கலோ, தீபாவளியோ ராணியும் ராஜாவும் இருந்த வரை அதுவும் செயலில்லாமல் முடங்கி, அப்புறம் எதுவும் கொண்டாட யாருமில்லாமல் அரண்மனை அட்டுப் பிடித்துக் கிடந்ததெல்லாம் அடி முதல் நுனி வரை மாறியதில் ராணிக்கும் மகிழ்ச்சிதான். வேதையன் பள்ளிக்கூடத்துக்கு அரண்மனைக்குள் இடமும், வாசகசாலையும் ஏற்படுத்தி வைத்த அப்புறம், கோவிலைச் சீராக்கினதன் பின்னால், இந்த இடத்தில் கூட்டத்துக்கும் குறைவில்லை. கொண்டாட்டமும் மிதமாக இருந்ததில்லை. ராஜாவும் ராணியும் உறங்கியும் ஊர்ந்தும் இருந்த அறைகளும்,…
‘வாழ்ந்து போதீரே’ நாவலின் இறுதி அத்தியாயத்தில் இருந்து – ஹோமம் ஆரம்பமாறது. கலந்துக்க வேணும். திராவிடப் பண்டிதர் வேண்டுகோள் விட, எல்லோரும் அங்கே தான். எந்தக் கடவுளின் கருணையினால் நாமனைவரும் நலமாகவும் எந்தக் குறையுமின்றியும் உயிர்த்திருக்கிறோமோ அந்த க்ஷேத்ரபதியை வழிபடுகிறோம். நம்முடைய பசுக்களும் குதிரைகளும் நலம் பெற்று இருக்க, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வர, அவரைத் துதிக்கிறோம். இயற்கை அன்னையின் கருணை எம் பசுக்கள் சுரக்கும் பால் போல் பெருகி ஓட அருள்க. நான்கு வட இந்திய…
என் அரசூர் நான்கு நாவல் வரிசையில் இறுதி நாவலான ‘வாழ்ந்து போதீரே’- நூலில் இருந்து வழக்கு முத்தச்சி ஃபைவ் ஸ்டார் ஹோட்டல். ஆலப்புழ – அம்பலப்புழ டவுண்பஸ் படிக்கட்டில் பல்லி போல தொங்கிக் கொண்டு நின்ற க்ளீனர் பையன் சத்தமாக அறிவித்துச் சிரித்தான். பஸ் இங்கே ஒரு அஞ்சு மினிட் நிக்கும். தோச, பரிப்பு வட, சாயா, மலையாளத்திலே தெறி பறைய, தமிழ்லே கெட்ட வார்த்தை சொல்லித் திட்ட வசதி எல்லாம் உண்டு மான்ய மகா ஜனங்களே….
என் ’வாழ்ந்து போதீரே’ நாவல் -சில பகுதிகள் உடம்பு சொடுக்கெடுத்து விட்டது போல் இருந்தது. ராஜாவுக்கு நடக்க நடக்கக் கம்பீரம் கூடிக் கொண்டு வந்ததேயல்லாமல் இம்மியும் அது இறங்கவில்லை. மணக்க மணக்க எல்லாத் தைலத்தையும் சுடச் சுடக் கலந்து உடம்பெங்கும் நீவி நாலைந்து ராட்சதர்கள் மரியாதையோடு உடம்பு பிடித்து விட்டு எதிர்பார்க்காத நேரத்தில் அவரைப் புரட்டிப் போட்டு முதுகில் ஏறி நின்று திம்திம்மென்று குதித்துக் கும்மாளமிட்டு இறங்கிப் போக எழுந்து உட்கார்ந்தது முதல் உடம்பில் ஒரு வலி,…
(ஆர்.கே.நாராயண் ஆங்கிலக் கட்டுரை – மொழியாக்கம் இரா.முருகன்) சமீபத்தில் நான் ஒரு பயங்கரக் கனவு கண்டேன். ஸனாடு என்ற பெயரில் வினோதமான ஒரு நாடு வந்த கனவு அது. நான் அந்த தேசத்தின் குடிமகனாகி இருந்தேன். அந்த நாட்டு அரசாங்கம் திடுதிப்பென்று கதைகள் கண்காணிப்பாளார் என்று ஒரு அதிகாரியை நியமித்து விட்டதாக அறிவித்தது. நாடாளுமன்றத்தில் எழுத்தாளர்களுடைய பிரதிநிதியும் இடம் பெற்றிருக்கும் தேசம் ஸனாடு. எழுத்தாளர்கள் தங்கள் பிரதிநிதியை இது பற்றிக் கேட்க, அவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் வினா…