Archive For The “பொது” Category
பசுவன் 1) காஞ்சங்காட்டு யட்சி. சத்தம் போட்டுச் சொன்னான் சிவராமன். அவன் என்ன சொன்னாலும் அதைத் திருப்பி ரெண்டு மூணு தடவை சொல்ல ஒரு கோஷ்டி காத்திருக்கும். இருந்தது. அந்தப் பையன்கள் பம்பரம் விட்டுக்கொண்டே, ”அச்சி காஞ்சங்காட்டு அச்சி”, என்றார்கள். ”அச்சி இல்லேடா. யட்சி”. சிவராமன் அவசரமாக அவர்களைத் திருத்தினான். அவனுக்கே சந்தேகம். அச்சி தானோ. போகட்டும். அவன் என்ன சொன்னாலும் இவர்கள் கேட்பார்கள். அவன் நில் என்றால் தரையில் மண்டி போட்டு நரநரப்பான மணல் முழங்காலில்…
என் ‘வேம்பநாட்டுக் காயல்’ மின்நூலில் இருந்து எடின்பரோ ராயல் லைசியம் தியேட்டர் குழுவின் பாஸ்ட் நாடகத்தைப் பார்க்கச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இரண்டு பாகமாக அமைந்த நாடகம். ஒவ்வொரு பாகமும் இரண்டு, இரண்டேகால் மணி நேரம் நிகழக்கூடியது. ஒரே நாளில் நிகழ்த்தப்படும் போது பார்க்கப் போனால், பிற்பகலிலிருந்து ராத்திரி பத்து மணி வரை நாடகம் பார்க்க, கொட்டகைக் கடையில் பியர் குடிக்க, மூத்திரம் போக, சாயந்திரம் தட்டுக்கடையில் சூடாக டோநட், சாயா, பக்கத்து டிராவர்ஸ் தியேட்டரிலும், அஷர் ஹால்…
என் நாவல் ‘அரசூர் வம்சம்’ நூலில் இருந்து ஓர் அத்தியாயம் ————————————————————– சாவக்காட்டு வேதக்கார பிராமணனுக்குப் புதையல் கிடைத்திருக்கிறது. ஊர் முழுக்க இதுதான் பேச்சாக இருக்கிறது. சேரமான் காலத்துக் காசு பணம், தங்க ஆபரணங்கள், பளிங்குக் குப்பி. நூதன வஸ்துக்கள். ஒரு பெரிய பானை. அது முழுக்க இந்த சமாச்சாரம் எல்லாம். சாவக்காட்டானைக் குடியிருக்கும் வீட்டுக்குக் குடக்கூலி கொடுக்காத காரணத்தால் வீட்டுக்காரன் சவட்டிப் புறத்தாக்கிய பிற்பாடு இதெல்லாம் கூடி நடந்தேறியிருக்கிறது. புறத்தாக்கிய வீட்டுக்காரனும் வேதத்தில் ஏறிய இன்னொரு…
உங்கம்மா சுமங்கலியாப் போயிட்டா. அப்பாவும் தீர்க்காயுசா இருந்து கல்யாணச் சாவு தான். பித்ரு காரியத்தை மட்டும் குறை வைக்காம பண்ணு. மாசாந்திரம் அமாவாசைக்குப் பண்ணாட்டாலும் பரவாயில்லே. இது வருஷ முடிவிலே வர்றது. அனிவர்சரி. மேரேஜுக்கு கொண்டாடறது மாதிரி ஜாம்ஜாம்னு செய்ய வேண்டிய காரியம். உங்கப்பாவும் சந்தோஷப்படுவார் கேட்டுக்கோ. ஷேமமா இரு. சீனு வாத்தியார் காலையில் வந்ததும் தெற்கிலிருந்து திவசத்துக்கு மூதாதையர் சகிதம் புறப்பட்டு வந்து கொண்டிருந்த சாமாவுக்கும் கேட்கிற சத்ததில் இரைந்து ஆசிர்வாதம் சொல்லி, ஆத்துக்காரியை வரச்…
சாகித்ய அகாதமி கேட்டுக் கொண்டபடி நான் எழுதிய ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் வரும் எழுத்தாளர் சுஜாதா பற்றிய நூலுக்கு நண்பர் மந்திரமூர்த்தி அழகு அவர்கள் எழுதிய அறிமுகம் – மதிப்பீடு. இந்நூல் விரைவில் வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து சாகித்ய அகாதமியால் வெளியிடப்படும். இந்திய இலக்கியச் சிற்பிகள்(சுஜாதா) – இரா முருகன் வெளியீடு: சாகித்ய அகாதமி முதல் பதிப்பு- 2020 பக்கங்கள்: 130 விலை: ரூ 50 இந்திய இலக்கியச் சிற்பிகள்- சுஜாதா என்ற இந்த…
என் ‘லண்டன் டயரி’ நூலில் இருந்து (கிழக்கு பதிப்பகம் வெளியீடு) சாயந்திரமும் ராத்திரியும் சந்தித்துக் கைகுலுக்கிக் கொள்ளும் நேரம். மெல்லப் படர்ந்து கொண்டிருக்கும் இருட்டில் லண்டன் நகருக்குக் குறுக்கே கோடு கிழித்தபடி நீண்டு விரிந்து கிடக்கும் தேம்ஸ் நதி. கரை நெடுக்க நியான் விளக்குகளும், மெர்க்குரி வேப்பர் குழல் விளக்குகளும் பிரகாசிக்கும் கட்டிடங்களிலிருந்து கசியும் ஒளி. அது நதியலைகளில் பிரதிபலித்தும் மறைந்தும் போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. நதிக்கரையில் ஒரு மதுக்கடை. பின்வரிசை நாற்காலியில் நான். மற்றும் இத்தாலிய, பிரஞ்சு…