Archive For The “பொது” Category
எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி (சீராக்கப்பட வேண்டிய பிரதி) குறிப்பு – இங்கே தரப்படும் சிறு நாவல் பகுதிகள் எந்த வரிசையிலும் வருகின்றவை அல்ல. ——————————————————- “மகாராணி அவர்களின் அறுபதாம் பிறந்த நாள் கொண்டாட்டம் மிக சிறப்பாக இருந்தது. அந்த விருந்து என்ன சுவை இன்னும் நாவில் உண்டு.” பெத்ரோ நிஜமாகவே லயித்துச் சொன்னார். சென்னா தேவியின் முகம் மலர்ந்தது. கை இரண்டையும் கூப்பி எல்லாம் இறைவன் செயல் என்றாள். பிரதானி…
Excerpts from the novel MILAGU I am currently writing – தற்போது எழுதிவரும் நாவல் மிளகு-வில் இருந்து ஒரு சிறு பகுதி (draft awaiting editing) ————————————————————————————————– திருவாளர் பெத்ரோவின் இரட்டைக் குதிரை வண்டி மிர்ஜான் துறைமுக நகர் கடந்து, மிர்ஜான் கோட்டைக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது காலை எட்டு மணி என்று அதிர்வேட்டு போட்ட சத்தம் காதில் விழ தன் கால்சராய் கடியாரத்தை எடுத்து மணி பார்த்தார். எட்டு அடிக்க இன்னும் பத்து நிமிடம்…
நான் எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து மாஜி அரசப் பிரதிநிதி ஒரு வினாடி ஏதும் பேசாமல் நின்றார். “சென்னபைரதேவி என்னை மதிக்காமல் நடந்து கொண்டது பெத்ரோவே, உமக்குத் தெரியாதா அல்லது மறந்து போனீரோ?” தெருவில் அடுத்து மூன்று குதிரை பூட்டிய ட்ரோய்க்கா ஒன்று பாதையை விட்டு விலகிச் சற்றே ஓரமாக வர, அதன் மேல் மோதாமல் ஒதுங்கி நின்றபடி கேட்டார் மாஜி கவர்னர். “பிரபு, மன்னிக்க வேண்டும். பல ஆயிரம் இங்கிலீஷ் பவுண்ட் மதிப்புக்கு மிளகும்,…
பதவி உயர்வு வேண்டாத சதுரங்க வீரன் (இரா.முருகன் புதுக் கவிதை) ————————– கறுப்பு நிறப் படைவீரன் ஒருத்தனை சதுரங்கப் பலகையின் குறுக்கே அழைத்துப் போய் வெள்ளை முதல் வரிசையில் கொண்டு நிறுத்தினேன். ”நீ யாராக ஆக ஆசைப்படுகிறாய் சொல் உன்னை மாற்றுவேன்”- வரம் வழங்கும் கடவுளாக கருணையோடு அவனைப் பார்த்தேன். என்னை யானை ஆக்கினால் நேரே நடப்பேன் பக்கவாட்டில் கோணல் இல்லாது ஊர்வேன் வேண்டாம் அந்த சொகுசு அசைவு நடக்கவே மறந்து போகும். என்னைக் குதிரையாக்கினால் புத்திசாலியாக…
மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி – Draft awaiting editing ஹொன்னாவர் நகரில் ஷராவதி ஆற்றுப் பாலத்தைக் கடந்து பெத்ரோ புண்ணியவாளனின் தேவாலயம் போகும் சாலை. புராதன மாளிகைகள் வரிசையாக நிற்கும் கருங்கல் பாவிய அகலமான வீதிகளில் ஒன்று அது. போர்த்துகீஸ் அரசப் பிரதிநிதி மேனுவல் அகஸ்டினோ பெத்ரோ வீட்டு வாசலுக்கு வந்து காத்திருந்த வெள்ளை நிற குதிரை பூட்டிய சாரட் வண்டியையும் சேணத்தைப் பற்றியபடி நிற்கும் கடைக்கீழ் உத்தியோகஸ்தனையும் மாறி மாறிப் பார்த்தார்….
Draft of an excerpt from my novel Milagu – work in progress. All rights @era.murukan பிரபஞ்சத்தில் அனைவருக்கும், அனைத்துக்கும், என்றால், உயிருள்ள, உயிர் என்பது இல்லாத அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மா உண்டென்று மொழிந்தருளினார் பகவான் மகாவீரர். ஒரு குக்கலை, என்றால் நாயைக் கல் எறிந்து காயப்படுத்தும் மூடர்கள் போல ஒரு செடியை இழுத்துப் காயும் பூவும் பறிக்கும் மூடர்களும் அந்தத் தாவரத்தை வலியால் துடிக்க வைக்கிறார்கள் என்று சொல்லியருளினார் அந்த மகான்….