Archive For The “பொது” Category
வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து : 1596-ம் ஆண்டில் ஒரு நாள் – சில பகுதிகள் பதினேழரை நாழிகை காலை ஏழு மணி ஹொன்னாவர் நகரின் சந்தை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பக்கத்து கிராமங்களிலிருந்து வந்த காய்கறிகளும், ஷராவதி நதித்தடத்தில் தூண்டிலிட்டுப் பிடித்துப் புதியதாக அனுப்பி வைக்கப்பட்ட மீன்களும் பிரப்பங்கூடைகளில் வைத்து விற்கும் சந்தைக் கடைகளில் சத்தமாக உள்ளது. தினமும் வாங்கினாலும் பேரம் பேசி வாங்குவதில் உள்ள சந்தோஷத்துக்காக குடும்பப் பெண்கள் கூடைகளோடு அடுத்த பேரத்துக்காக…
வளர்ந்து வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி கோட்டை மண்டபத்தில் இருக்க நினைத்து வேண்டாம் என்று வைத்து உள்ளே சமையலறையும், உணவுப் பொருட்கள், காய்கறிகள் சேமிக்கும் அறைகளும், பாத்திரங்கள் அடுக்கியிருக்கும் பெரிய அலமாரிகள் வரிசையாக நீண்ட ஈரமான அறைகளுமாக விளங்கும் பிரதேசத்திற்குள் நடந்தாள் அவள். மெய்க்காப்பாளர்கள் அவளுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாகச் சென்னாவைத் தொடர்ந்து ஓடிவந்தார்கள். எந்தக் கசடும் குப்பையும் இல்லாத சமையலறையில் பெரிய அக்னிக் குண்டங்கள் போல் கோட்டையடுப்புகள் எரிய…
சக எழுத்தாளர்களின் பாராட்டு சந்தோஷத்தைத் தரும். வெவ்வேறு துறை சார்ந்த, முக்கியமாக கலைத்துறை சார்ந்த நண்பர்களின் நல்ல வார்த்தைகள் இன்னொரு விதமான மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இன்று காலை வந்த ஒரு பாராட்டு – // Only recently I got to read arasur vamsam. Thoroughly enjoyed it, especially the lingo, the expressions in the dialogues and the small detailing. Thanks so much // நன்றி நண்பர் சஞ்சய்…
பரமன் என்ற பரமேஸ்வரன் 1960-இல் நாக்பூர் சிறு விமானத் தளத்தில் சொல்லாமல் விமானம் விட்டு இறங்கித் திரிந்தபோது நான்குவாயில் மண்டபம் வழியே 1595-ம் ஆண்டு உத்தர கன்னடப் பிரதேசத்தில் ஜெர்ஸோப்பா நகர் போய்ச் சேருகிறான். மிளகு ராணி காலம் அது. ——————————— கண்ணில் முன்னால் பட்ட வாசல் பக்கம் போய் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே போக நின்றார் பரமன். அப்போதுதான் கவனித்தார். அந்தக் கட்டடமே ஏதோ அச்சில் சுழல்கிறது போல மெல்லச் சுற்றிக் கொண்டிருந்தது. இந்தக்…
(வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து) —————————————– தலையை ஆட்டிக் கொண்டு ஒரு நிமிடம் இருந்துவிட்டு தாங்குகோல்களை சத்தம் எழுப்பாமல் தரையில் கிடத்தி, “நீ எப்படி இருக்கே? உன் ஆத்துக்காரி எப்படி இருக்கா? எத்தனை பசங்க? என்ன பண்றாங்க? உலகத்திலேயே அப்பா பிள்ளை இப்படி அந்நியர்கள் மாதிரி ஷேமலாபம் விசாரிக்கறது வேறெங்கேயும் நடந்ததா தெரியலே. நடக்கவும் போறதில்லே” என்றார் வந்தவர். “என் பொண்டாட்டி அகல்யா அஞ்சு வருஷம் முன்னாடி சகல சௌபாக்கியத்தோடயும் போய்ச் சேர்ந்துட்டா. செர்வைகல் கேன்சர்….
’மிளகு’ -வளர்ந்து வரும் நாவலில் இருந்து – பெரும்பாலான சடங்குகள் விரிவான விருந்துகளில் முடிவடைகின்றன. அவற்றைப் பற்றித்தான் திலீப் ராவ்ஜியின் ஆதங்கம் மனதில் அழுத்த வேரூன்றி இருக்கிறது. புரோகிதர்கள் நிர்வகித்து நடத்தித் தரும் வருஷாப்திகம் என்ற நீத்தார் நினைவஞ்சலி, காது குத்துதல், பிரம்மோபதேசம் என்று எந்த சடங்கிலும் ராவ்ஜி அழைக்கப்படுவதில்லை. அவர் முப்புரிநூல் அணியாததே அதற்கான பிரதம காரணமாக இருக்கலாம் என்பதை ராவ்ஜி அறிவார். ஆனால், புரோகிதர்கள் இல்லாமல் அவர் எப்படி அகல்யாவுக்கு சாப்பாடு தர முடியும்?…