Archive For The “பொது” Category
மிளகு நாவலில் இருந்து – a small extract இவ்வளவு கிராமப் புறமாக, பெரிய கோவில்கள், மாளிகைகள் ஒரு பக்கம் இருக்க, மின்சாரத்தின் சுவடுகூட இல்லாமல், உடுப்பும் வேதகாலம் போல் பஞ்சகச்சமும் மூலக்கச்சமும் அணிந்து ஒரு பெரிய நகரமே மேடையில்லாத நாடகத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகத் திரும்பத் திரும்ப மனதில் வந்தது. வாசலுக்கு வந்த அந்தப் பெண் ஓய் வாரும் எப்படி இருக்கீர் என்றாள். பிரமாதம் என்று அவர் சொன்னது புரியாமல் மயங்கி அடுத்து உடனே வசீகரமாகச் சிரித்தாள்…
நான் எழுதி வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து ஒரு சிறு பகுதி அற்பமாக ஒரு இனிப்புப் பதார்த்தத்துக்கு இத்தனை பேர் உயிரை விடுகிறார்கள். நாலு நாளாகக் கிண்டிக் கிளறிக் கொட்டிப் பரத்தி செங்கல் மாதிரி பெரிய வில்லைகளாக நீளக் கத்தியால் வெட்டி, வாழைமட்டை பொதிகளாக அடுக்க, கையே தனியாகக் கழன்று விழப் போவதுபோல வலி. விஜயநகரம் என்றாலே விருந்து, பண்டிகை, இனிப்புகள், சிற்றுண்டிகள் என்று ஒரே வட்டத்திற்குள் மறுபடி மறுபடி போய் இணைந்து கொள்கிறதை பரமன் கவனித்தார்….
A small extract from my novel MILAGU on the anvil கோட்டை மண்டபத்தில் இருக்க நினைத்து வேண்டாம் என்று வைத்து உள்ளே சமையலறையும், உணவுப் பொருட்கள், காய்கறிகள் சேமிக்கும் அறைகளும், பாத்திரங்கள் அடுக்கியிருக்கும் பெரிய அலமாரிகள் வரிசையாக நீண்ட ஈரமான அறைகளுமாக விளங்கும் பிரதேசத்திற்குள் நடந்தாள் அவள். மெய்க்காப்பாளர்கள் அவளுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாகச் சென்னாவைத் தொடர்ந்து ஓடிவந்தார்கள். எந்தக் கசடும் குப்பையும் இல்லாத சமையலறையில் பெரிய அக்னிக் குண்டங்கள் போல்…
ஜனவரி, பிப்ரவரியில் தேசமே மிதமான குளிரும், பூப்பூத்த மரங்களும், பச்சைச் செடிகொடிகளுமாக சொர்க்கம் போல் காட்சியளிக்கும். மூன்று அல்லது நான்கு பாய்மரங்கள் உள்ள காரக் வகைக் கப்பல்களிலோ, சிறிய ஆனால் ஆழமில்லாத கடற்கரையை ஒட்டிய பிரதேசங்களிலும் எளிதில் பயணம் செய்யும் வேகம் மிகுந்த காரவேலா கப்பலிலோ நீங்கள் வரும் நவம்பர் மத்தியில் புறப்பட்டால் ஜனவரி முதல் வாரத்தில் லிஸ்பனை அடையலாம். அப்படியே எடுத்துக் கொள்ளட்டுமா?” ஆர்வம் மிகுந்த குரலில் பெத்ரோ பிரபு வினவினார். “இருங்கள் சென்ஹோர் இமானுவல்…
“உன்னைக் கூட்டிப் போறதா எங்கே சொன்னேன்? உன் பெண்டாட்டி மிங்கு என்னோடு வருவா” என்று வைத்தியரின் ஆச்சரியத்தைக் கலகலவெனச் சிரித்து ரசித்தபடி சொன்னாள் சென்னபைரதேவி மகாராணி. வைத்தியர் மிங்கு வீட்டுக்காரனாக ஒரு நிமிஷம் மாறி அவளிடம், “ஆசிர்வாதம் வாங்கு” என்று சொல்ல, தம்பதியாக இருவரும் சென்னாவின் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்கள். “பயணம் போனா, நீங்க ரெண்டு பேரும் உண்டு கட்டாயமாக” என்றாள் ராணி. ”பத்து சிமிழ் மருந்து வேணுமா?” வைத்தியரை ஆர்வத்தோடு கேட்டாள் அவள்….
“சென்ஹோர் கார்லோஸ், மிளகு ராணி தீர்க்காயுசாக நூறு வயதும் கடந்து சௌக்கியமாக இருப்பார்கள். நான் எங்கே ராஜாவாவது? இருக்கும் ராஜகுமாரன் பதவியை இன்னும் ஆயுசு இருக்கும் நேரம் வரை வகித்து விட்டுப் போய்ச் சேர வேண்டியதுதான்” என்றான் நேமிநாதன் உதிர்த்த லட்டை மென்றுகொண்டு. ”அது ஒரு வழிதான். ஆனால் வயதானவங்களை சற்றே ஓய்வெடுக்கச் சொல்லிட்டு அவங்க சார்பிலே ஆட்சியை நடத்தலாம். எவ்வளவு வருஷமா மிளகு விற்றுக்கிட்டு இருக்காங்க. கையே மிளகு மாதிரி கரடுமுரடா ஆகியிருக்குமே. கண்ணுக்குள்ளே மிளகுப்பொடி…