Archive For The “பொது” Category
“நேற்று நான் ஒரு கனவு கண்டேன். எல்லா தீர்த்தங்கரர்களும் சிற்பமாக உருவாகும் ஒரு சமணக் கோவில்.பஸதி. வாசலில் கழிவுநீர் ஓடை. அதன் நடுவே கழுத்து வரை மூழ்கியபடி ஒரு சிறுமி துணி பொம்மையை அசுத்த நீரில் நனைத்து சிரிக்கிறாள். தேங்கிய சாக்கடை இது. நான் பஸதிக்குள் போகிறேன். பாதி உருவான தீர்த்தங்கரர்கள் சுவர்ப்பக்கம் பார்த்தபடி திரும்பிக் கொள்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள் – எங்களுக்குப் படைக்க நீ எடுத்து வந்திருக்கும் இனிப்புகளும் பழங்களும் எங்களுக்கு வேண்டாம். அந்தச் சிறுமியை…
உளிகள் விடிந்தது முதல் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. தனி உளி எழுப்புவது ஒலி இல்லை. பூவில் தேன் அருந்தப் போய் அமரும் தேனியின் மெல்லிய இறகுச் சிலிர்ப்பு போன்றது அது. பத்து உளிகள் சேர்ந்தால் எழும் ஓசை, காதலனொருவன் அன்புக் காதலிக்கு அவசரமில்லாமல் நிறுத்தி நிதானமாகக் கன்னத்தில் தரும் முத்தத்தின் சத்தம் போன்றது. சென்னா செவிமடுத்தது, கடல் அலை தனக்குள் பாடியபடி கரைக்கு வந்து, திரும்பப் போய், மறுபடியும் வந்து, திரும்ப போய், சலிக்காமல் அந்த ஒரே…
“கஸ்ஸி, வா, வா, உன் மலர்ப் பாதங்களை தாங்கிக் கிடக்க என் வீட்டுப் படிகளுக்கும் வாசல் தரைக்கும் என்ன அதிர்ஷ்டம்”. போர்த்துகீசிய மொழியில் மிகை நாடகம் ரசிக்கப்படுவது அதிகம் என்பதை மனதில் நினைத்தோ என்னமோ எழுபது வயது கவுடின்ஹோ மிகையான கையசைவு, கண் உருட்டல், வாயைக் கிழித்துத் தொங்கவிட்டதுபோல் புன்னகை, அசட்டுப் பேச்சு என்று கூத்து நிகழ்த்த, பொறுத்துக்கொண்டு வல்லூறு எங்கே கொத்தப் போகிறது என்று ஊகித்தபடி உள்ளே வந்தாள் கஸாண்ட்ரா, அவர் கூப்பிட்டது போல் கஸ்ஸி…
மிளகு நாவலில் இருந்து விடிந்து கொண்டிருக்கும்போது அந்தப் பெண்கள் நடக்கத் தொடங்கினார்கள். சிறுபறை கொட்டிப் பாடிக்கொண்டே நடந்தால் நடக்கும் தொலைவு தெரியாதென்று பாட ஆரம்பித்தது, நடையும் தீரவில்லை, பாட்டும் ஓயவில்லை. எல்லோரும் பதினைந்து வயதிற்கு உட்பட்ட கன்யகைகள். எல்லோரும் பதினைந்து வயதுக்காரிகள் என்றோ சொன்னது? இந்தக் கூட்டத்தைத் தலைமை வகித்து நடத்திச் சென்றவள் காசிரை. அப்படித்தான் தன் பெயரைச் சொல்லிக்கொள்கிறாள் கஸாண்ட்ரா சில நேரம். பல நேரமும் அவள் தன் போர்த்துகீசிய தந்தை ரொனால்டோ பத்ரோஸின் மகளாக…
மிளகு நாவலில் இருந்து – ஸ்னான கட்டத்திற்குள் காசிரை நுழைந்தபோது ஒரே சிரிப்பும் கலகலப்பான பேச்சுமாக ஒரு நூறு பெண்கள் நீண்டு வளைந்து குளம் போல் பாத்தி கட்டி ஷராவதியை மடை மாற்றி கிழக்கு திசையில் கொஞ்ச தூரம் வேகமின்றி மெல்ல அசைந்தாடிப் போகவைத்திருக்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் அரபிக் கடலின் முதல் அலைகள் நிலம் தொட்டுப் போக, குளியல் மண்டபம் விடிந்து கொண்டிருக்கும் பொழுதில் வெளிச்சம் பூசி நின்றது. கட்டத்தின் படிகளில் ஆணில்லாத பெண் ராஜ்யம் என்ற…
மிளகு நாவலில் இருந்து சிறு பகுதி காவேரியும், கோதாவரியும் கிழக்கு நோக்கிப் பெருகிப் போக, ஷராவதி நதி மேற்குத் திசையில் பிரவகித்து ஹொன்னாவரில் அரபிக் கடலில் கலக்கும். அமைதியான, பரந்த வெள்ளப்பெருக்காக நிலம் தொட்டு, பிரம்மாண்டமான ஜோகு அருவியாகப் பொங்கி, உயரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை அணைத்துக் கீழே ஆவேசமாகப் பொழிந்து, குறுகிய நதிதீரங்களுக்கு இடையே சுழித்துச் சுருண்டு, உயர்ந்து, அலையடித்துக் கடந்து சென்று, கடல் தீரத்தில் நுழைந்து, சதா இரைந்து பாடும் அலைகளோடு கைகோர்த்து…