Author Archive

வாழைக்காய் குழம்பும் வக்கத்த வீட்டுப் பொண்ணும் – குறுநாவல் ராத்திரி வண்டி

By |

வாழைக்காய் குழம்பும் வக்கத்த வீட்டுப் பொண்ணும் – குறுநாவல் ராத்திரி வண்டி

    ‘அம்மா …. தினம் கஞ்சி தானா? நல்லாவே இல்லேம்மா….’   ‘நாளைக்கு சோறு பொங்கலாம்… அரிசி வருது…’   ‘அம்மா…’   ‘என்னடா?’   ‘இந்த எடத்தை ஏன் காடி கானாங்கறாங்க?’   ‘அந்தக் காலத்துலே சாரட் வண்டி நிக்குமாண்டா இங்கே..’   ‘யாரு அதிலே போவாங்க?’   ‘பெரிய வீட்டுலே இருக்கறவங்க’   ‘நாமளும் பெரிய வீட்டுலே போய் இருந்தா என்னம்மா?’   ‘ஏண்டா இந்த எடத்துக்கு என்னடா? நம்ம நிலமைக்கு இதாவது…




Read more »

பச்சை, சிகப்புக் கொடிகள் அசைக்கும், சமைக்கத் தெரிந்த ஸ்டேஷன் மாஸ்டர்

By |

பச்சை, சிகப்புக் கொடிகள் அசைக்கும், சமைக்கத் தெரிந்த ஸ்டேஷன் மாஸ்டர்

ராத்திரி வண்டி                  இரா.முருகன்  பகுதி – 5 அ   இந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு சமைக்கவும் தெரிந்திருக்கிறது. கரணை கரணையாகக் கையும் காலும் இருக்கப்பட்ட மனுஷன். மனுஷர்.  அதை வைத்துக் கொண்டு பச்சைக் கொடியும் சிவப்புக் கொடியும் மாறி மாறிக் காட்டலாம். இப்படி குழம்பு செய்ய புளியை மய்ய மசியக் கரைக்கலாம்.  படம் எல்லாம் ஒண்ணும் போட வேண்டாம். சர்க்கார் வீட்டில் பெண்டாட்டிக்கு அலமாரியில் புடவை மடித்து வைக்கலாம். காணாமல் போன பவுடர் டப்பா மூடியைய்த் தேடி…




Read more »

ராத்திரி வண்டி குறுநாவல் ரயில் வராத ராத்திரி

By |

ராத்திரி வண்டி     குறுநாவல்   ரயில் வராத ராத்திரி

  ராத்திரி வண்டி   குறுநாவல்   பகுதி 4 ஆ   வீட்டைத் துறந்து போட்டுட்டு இவனையும் தனியா விட்டுட்டுப் போகணுமா… கணபதி இருந்தாலாவது.. அட நூறு வயசுய்யா உனக்கு கணபதி…   ‘கொஞ்சம் சார் கூடப் பேசிக்கிட்டு இப்படி வாசல்லே இரு கணபதி… நான் இதோ வர்றேன்..’   கணபதிக்கு அந்த சித்திரக்காரனைப் பார்க்கும்போதே சிரிப்பு வந்தது. ஒரு மாதிரிப்பட்ட ஆள். குஷால் பேர்வழி..நாலு பேர் பார்க்கவே மொட்டக் கட்டயாப் பொம்பளை பட போடறவன் இன்னும் என்னவெல்லாம்…




Read more »

எல்லாப் படமும் நல்லாத் தான் இருக்கு.. எனக்குத் தான் ரசிக்கத் தெரியலேன்னு தோணுது’

By |

எல்லாப் படமும் நல்லாத் தான் இருக்கு.. எனக்குத் தான் ரசிக்கத் தெரியலேன்னு தோணுது’

ராத்திரி வண்டி                  இரா.முருகன்  பகுதி – 4 அ     சீவகன் எல்லாப் படங்களிலும் பிரம்மாண்டமான கட்டிடங்களைப் பார்த்தான்.   மஞ்ச மசேல்னு, பச்சை மினுக்கிக்கிட்டு… நடுவிலே நடுவிலே கசாப்புக்கடை சுவர் மாதிரி சிவப்பு வேறே தெளிச்சு இருக்கு… சொல்லி வச்சாப்பிலே எல்லாம் இருளோன்னு கிடக்கு.. அப்புறம் எல்லாத்திலேயும் ஓட்டை உடசல் கடியாரம், மரப்பெட்டி, பிரம்பு பிஞ்சு தொங்கற நாற்காலி… ஒண்ணுலே ஒரு பொம்பளை முகத்தைத் தலை முடியாலே மறச்சுக்கிட்டு மாடி ஏறிட்டு இருக்கா. ஜன்னலுக்கு…




Read more »

ராத்திரி வண்டி

By |

ராத்திரி வண்டி

‘வடக்கே எல்லாம் டீத்தூளைஉம் பாலோட சேர்த்துக் கொதிக்க வச்சுத்தான் டீ தயார் பண்ணுவாங்க’.   ’நல்லா இருக்குமா என்ன அது?’   ஸ்டேஷன் மாஸ்டர் கவலையோடு கேட்டான்.   ‘நான் வாரணாசியிலே இருந்தபோது அப்படிக் குடிச்சே பழகிடுத்து’   ‘வாரணாசின்னா காசிதானே? பெரிய கோயிலெல்லாம் இருக்கு இல்லே?’   ‘நான் அங்கே மசான கட்டத்தைத் தான் வரஞ்சுக்கிட்டிருந்தேன். எரிச்சு எரிச்சு கங்கையிலே விடுவாங்க. படிக்கட்டு எல்லாம் சாவு பூசிக்கிட்டு எப்பவும் வைராக்கியத்தோட கிடக்கும்’.   ‘பார்க்க எப்படியோ…




Read more »

ராத்திரி வண்டி குறுநாவல் – ஸ்டேஷன் மாஸ்டரின் தேநீர் உபசாரம்

By |

ராத்திரி வண்டி குறுநாவல் – ஸ்டேஷன் மாஸ்டரின் தேநீர் உபசாரம்

ராத்திரி வண்டி                  இரா.முருகன்  பகுதி – 3   தேசிகர் ஒடுக்கத்தில் இருக்கிறார். வெளியே ஓதுவார்கள் சத்தம் போட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இது வழக்கமான தேவாரப் பண் இல்லை. இங்கிலீஷ் மோஸ்தரில் கட்டிய பாட்டு…   ’துங்கஞ்சார் தருதுரைசை யில்வளர் சுப்பிரமணிய தயாநிதியே…’   அலையில் மிதக்கிற படகுபோல, பெங்குவின் பறவைகள் கூட்டமாக அடியெடுத்து வைக்கிறது போல், தோய்த்து உலர்த்திய காவித் துணிகள் காற்றில் பறந்து அலைக்கழிவது போல… காதிலே ஜவ்வந்திப் பூ வைத்து, கூரை வேய்ந்த…




Read more »