Author Archive

நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ வெளியாகி விட்டது

By |

நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ வெளியாகி விட்டது

ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் உரிமையாளர்களும் இந்நாவல் பதிப்பாளர்களுமான நண்பர்கள் காயத்ரி, ராம்ஜி நரசிம்மன் எழுதுகிறார்கள்- மிளகு நாவலின் வெற்றியைத் தொடர்ந்து EraMurukan Ramasami எழுதிய தினை அல்லது சஞ்சீவனி நாவல் அச்சாகி கைக்கு கிடைத்து விட்டது. முதல் முறையாக அவர் நாவலை கெட்டி அட்டையில் அச்சிடுவதில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பெருமை கொள்கிறது. 200 பிரதிகள் மட்டுமே கெட்டி அட்டையில் அச்சிடப்படும். முதல் 100 பிரதிகளுக்கு மட்டும் நாற்பது சதவீதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறோம். இதை வாங்கிப் படித்து…




Read more »

நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ – அணையப் போகும் பழந்தீ

By |

நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ – அணையப் போகும் பழந்தீ

வழி மறந்த கடைசிப் பறவை வீடு திரும்பும் பின் அந்திப் பொழுதில் இந்தப் பெண்கள் திரும்பினார்கள். இலுப்பெண்ணெய் தாராளமாக ஊற்றிப் பெரிய பருத்திப் பஞ்சுத் திரிகள் எண்ணெய் நனைத்துக் கொளுத்திய சுடர்கள் தெருவெங்கும் வீட்டு மாடப்புரைகளில் இருந்து ஒளி வீச இன்னும் சிறிது நேரத்தில் இரவு நிலம் போர்த்தும். குயிலிக்கு வியப்பாக இருந்தது. ஐம்பதாம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டுக்கு வந்து சேர்ந்தாலும், இரவும் பகலும் அந்தியும் இன்னும் எந்த வித்தியாசமும் இல்லாமல் வந்துதான் போகும். எப்போதும்…




Read more »

கெருஸோப்பாவில் இருந்து ஹொன்னாவருக்கு ஒரு பயணம் – பெருநாவல் மிளகுவில் இருந்து

By |

கெருஸோப்பாவில் இருந்து ஹொன்னாவருக்கு ஒரு பயணம் – பெருநாவல் மிளகுவில் இருந்து

வேலைக்கு விடுப்பு வந்த தினம் என்று நிறைவேற்றிக் கதவு சார்த்திப் பூட்டுப் போட யாருக்கும் கஷ்டமில்லை. இன்று அப்படி கடைவீதி உறங்கும் பௌர்ணமி வாவுதினம். அழகான அதிகாலை. பௌர்ணமி வாவுதினமும், அமாவாசை வாவுதினமும் சிறுமிளகு பெருநாவல் சிறுபகுதிக்கு சொடுக்குகவன் மஞ்சுநாத்தின் அப்பா பரமன் பெரும்பாலும் ஜெருஸோப்பா வீட்டில் இருக்கும் நாட்கள் இல்லை. ஹொன்னாவருக்கு வந்து ரதவீதி மிட்டாய் அங்காடியில் ஏதாவது புது இனிப்புப் பலகாரம் செய்து பார்க்கும் முயற்சிகளில் இருப்பார் பரமன். வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தால், ஊர்…




Read more »

தேள்களின் ஊர்வலம் – புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இருந்து

By |

தேள்களின் ஊர்வலம் – புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இருந்து

தேள்களும் அவற்றுக்கு ஆட்பட்ட மானுடரும் பங்கு பெறும் ஊர்வலம் ========================================================================================= ஊர்வலம் பிரம்மாண்டமானதாக இருந்தது. கலந்து கொண்ட ஜீவராசிகளில் தரையில் சுவாசிக்க முடியாதவை கூட பெரிய பாலிவினைல் தொட்டிகளில் நீர் நிரப்பி அதில் சுவாசித்து உலாவில் கலந்து கொண்டன. நெருப்பின்றி கந்தக உருண்டைகளை நீண்ட குழாய்களில் நிரப்பி அதிர்வெடிகள் நிலமதிர வெடித்த நூறுகால் பூரான்கள் இரண்டு வரிசையாக அகலவாட்டில் நடந்து வந்தன. இசைக்கருவி எதுவோ நாராசமாக ஒலித்தது. நடுவே இரு குழுக்களாக வெல்வெட் போல் மெத்தென வழுவழுத்த…




Read more »

வைத்தியர் எழுதிய தளை தட்டிய நேரிசை வெண்பா – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

By |

வைத்தியர் எழுதிய தளை தட்டிய நேரிசை வெண்பா – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

விழித்தெழுந்த பொழுதில் நகர வேண்டியவை பறக்கத் தொடங்கின. எங்கணும் பறவைக் கூச்சல். மருத்துவர் நீலனின் குடிலில் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது. குடில் என்று ஒரு பழக்கத்தால் தான் குறிப்பிடுவது என்று அந்தக் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாலே புரியும். இரண்டு தளங்கள் செங்கல் கூரை மூடியும் வானம் பார்த்த மச்சுமாக வீட்டுடமையாளரின் செழிப்பைச் சொல்வதாக அந்த இல்லம் திகழ்ந்தது. கீழ்த்தளத்தில் சஞ்சீவி மலையைச் சுமந்து கம்பீரமாகப் பறக்கும் அனுமனின் வண்ணப்படம் சுவரை நிறைத்திருந்தது. அந்த ஓவியத்துக்கு தினசரி…




Read more »

From the novel The Ghosts of Arasoor – The Ancestors enter into cowries and speak

By |

From the novel The Ghosts of Arasoor – The Ancestors enter into cowries and speak

An iron monster of a machine on four wheels, trumpeting like an elephant, the king thought the car and his neighbour’s gramophone must be one in spirit. It was the Banian Brothers who had first told the king the name of the music box—gramophone. The music box too came after the king’s time. The Banian…




Read more »