Author Archive

Shape Shifter enters the scene – Novel Thinai alladhu Sanjeevni

By |

Shape Shifter enters the scene – Novel Thinai alladhu Sanjeevni

from chapter 27 மேசை மேல் தலையில்லாத குழலனின் உடல் அசைந்து கொண்டிருக்க தலை அறையை தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்தது. அக்ரெலிக் பெயிண்ட் வாடை தூக்கலாக வந்து கொண்டிருந்த இடம் அது. எந்தத் தலைமுறையிலோ அக்ரெலிக் வண்ணம் தேள்க் கூட்டத்துக்கு ஒவ்வாமை தருவதாக குணம் கொண்டிருந்தது. தேளர்கள் நடமாட்டத்தைக் கிட்டத்தட்ட அறவே இல்லாமல் செய்யச் சுவர்களை தினமும் அக்ரலிக் வண்ணமடித்து அந்த வாடை நீங்காமலும் குறையாமலும் கவனம் வைத்திருப்பது வழக்கம். குயிலியின் நாசியில்…




Read more »

மிளகு பெருநாவலில் இருந்து ஒரு பயணம்

By |

மிளகு பெருநாவலில் இருந்து ஒரு பயணம்

கொச்சி நெடும்பாஸ்ஸேரி விமான நிலையம் நீங்கி மங்களூர் செல்லும் விமானம் குறிப்பிட்ட நேரமான காலை ஆறு மணிக்குப் புறப்படத் தயாராக இருந்தது. நாலு மணி நேரம் எடுக்கும் நீண்ட பயணம் இது. விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமை என்பதாலோ என்னவோ அந்தச் சிறு விமானத்திலும் வெற்று இருக்கைகள் நிறைய இருந்தன. ஜெயம்மா மங்களூருக்கு வரச்சொல்லிக் கையோடு அழைத்துப் போகும் வசந்தியும் சங்கரனும் தவிர தெரிசாவும் அவர்களோடு இருந்தாள். தெரிசாவும் கூட இருப்பது சங்கரனுக்கு ஏதாவது ஒரு விதத்தில்…




Read more »

My speech at UNMESHA 2023

By |

My speech at UNMESHA 2023

My two penny worth of thoughts shared in Sahitya Academy curated and conducted UNMESha 2023 international literary festival in Bhopal 3rd August to 6th August. The topic was fantasy and science fiction . I was able to cover fantasy.. click on UNMESHA 2023 below unmesha 2023 I speak from 35:00




Read more »

நான் எடுத்த படம் பற்றி ராயர் காப்பி கிளப் நூலில் இருந்து

By |

நான் எடுத்த படம் பற்றி ராயர் காப்பி கிளப் நூலில் இருந்து

2003-இல் எழுதியது. நான் எடுத்த ஆணவப் படம் ஆவணப் படங்கள் எடுப்பது பற்றிப் போன வாரம் இங்கே எழுதியதைப் படித்த ஓர் அன்பர் சொன்னார் – ‘காம்கார்டரில் படம் எடுத்துக் கம்ப்யூட்டரில் மென்பொருள் கொண்டு எடிட் செய்து ஆவணப் படம் எடுக்கலாம்’. கம்ப்யூட்டர் இருக்கு, மென்பொருள் இருக்கு. நாமும் ஒரு ஆவணப் படம் தயாரிக்கலாமே என்று யோசனை சில மாதங்கள் முன்னால் வந்தது. அறுநூறு பவுண்ட் கொடுத்து புஷ்டியான சோனி டிஆர்வி 14 ஈ காம்கார்டர் வாங்கிக்…




Read more »

’பேனா’ அப்புசாமி

By |

’பேனா’ அப்புசாமி

‘பேனா’ அப்புசாமி – பெ.நா.அப்புசுவாமி என்ற அறிவியல் எழுத்தாளர் தலைப்பாகையும், பஞ்சகச்சமும் கருப்புக் கோட்டுமாக சாரட் வண்டி ஏறிக் கோர்ட் கச்சேரி போய்த் துரைகள் முன்னால் ஆஜராகி வாதி, பிரதிவாதி சார்பில் வலுவான வாதங்களை வைத்து மயிலாப்பூர் வக்கீல்கள் கலக்கிக் கொண்டிருந்த 1920 களில் , லா பாயிண்ட்தேடாமல் அறிவியலைத் தேடிப் படித்து அதைத் தமிழில் தந்தவர் சட்டம்படித்த பெ.நா.அப்புசுவாமி. பாக்கியம் ராமஸ்வாமி சாஸ்வதமாக்கிய அப்புசாமித் தாத்தாவுக்கும் இந்த அறிவியல் தாத்தாவுக்கும் வயதும் துறுதுறுப்பும் தான் ஒற்றுமை….




Read more »

நடந்தாய் வாழி ஷராவதி

By |

நடந்தாய் வாழி ஷராவதி

மிளகு பெருநாவலில் இருந்து அமைதியான, பரந்த வெள்ளப்பெருக்காக நிலம் தொட்டு, பிரம்மாண்டமான ஜோகு அருவியாகப் பொங்கி, உயரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை அணைத்துக் கீழே ஆவேசமாகப் பொழிந்து, குறுகிய நதிதீரங்களுக்கு இடையே சுழித்துச் சுருண்டு, உயர்ந்து, அலையடித்துக் கடந்து சென்று, கடல் தீரத்தில் நுழைந்து, சதா இரைந்து பாடும் அலைகளோடு கைகோர்த்து விளையாடி, கொஞ்சம் கொஞ்சமாக சமுத்திரத்தின் மகா இயக்கத்தில் கலந்து தனதான அடையாளம் இழந்து, ஆற்று மணலின் மெல்லிய இனிப்புச் சுவையும், தண்ணீர்த் தாவரங்கள்…




Read more »