Author Archive

வரவேற்பறையில் வந்து ஆடிய மயில் இன்னும் அங்கே தான்

By |

வரவேற்பறையில் வந்து ஆடிய மயில் இன்னும் அங்கே தான்

வாழ்ந்து போதீரே, அரசூர் நாவல் வரிசையில் நான்காவதாக வெளிவந்துள்ளது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங்க் அச்சுப் பதிப்பாக அண்மையில் வெளியிட்ட இந்த நாவலில் இருந்து கதவுக்கு வெளியே நிறையப் பதக்கங்களும் கயிறுகளும் நாடாக்களும் அப்பிய, பச்சை அழுத்தமாகப் பதிந்த ராணுவ உடுப்போடு நடு வயது மேஜரோ வேறே பெரிய பதவியில் இருப்பவரோ ஒருவர் மண்டி போட்டுக் கைகளை ஒருசேர மேலே உயர்த்தி இருந்தார். அவர் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அந்த அதிகாரிக்கு இரண்டு அடி தூரத்தில்…




Read more »

உறவு சொல்ல ஒரு தெய்வம்

By |

உறவு சொல்ல ஒரு தெய்வம்

வாழ்ந்து போதீரே நாவல் அரசூர் நாவல்களில் நான்காவது, அதன் தொடக்க்ம் இது வாழ்ந்து போதீரே ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பாக 2022ம் ஆண்டு வெளியாகியுள்ளது கடவுள். கிட்டத்தட்ட கடவுள். உறங்கிக் காலையில் விழித்ததும் தேநீர் கொடுக்க ஒரு படையே நிற்கிறது. ராணுவம். நூறு, இருநூறு வீரர்கள். கருத்துத் தடித்தவர்கள். மாறி மாறி வருகிறார்கள். நந்தினிக்கு அவர்கள் எல்லோரும் பகலும் இரவும் காவல். நந்தினி அவர்களுக்கு நிரந்தரக் காவல். ஒரு வருடமாக இப்படித் தான் நடக்கிறது. வீட்டு வாசலில்…




Read more »

மாறிக் கொண்டே வரும் கரடியின் நிலைபாடு= பிடித்துக் கட்டுக

By |

மாறிக் கொண்டே வரும் கரடியின் நிலைபாடு= பிடித்துக் கட்டுக

நாவல் தினை அல்லது சஞ்சீவனி இறுதி அத்தியாயம் திண்ணை இணைய இதழில் வந்துள்ளது. அதிலிருந்து நாவல் திணை அல்லது சஞ்சீவனி இந்த ஆண்டு ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அச்சுப் பதிப்பாக வெளியாகியுள்ளது நாடு முழுவதும் பல கரப்புகள் கரப்புகளாலேயே கொல்லப்பட்டன. இரண்டு இரண்டு கரப்புகளாக அணைப்பில் இருத்தப்பட்டு இந்த இணையர்களில் ஒருவர் மற்றவரின் தலையை கத்தி போன்ற கால் கொண்டு அறுத்து எறியக் கட்டளை பிறப்பிக்கப் பட்டது. கரகரவென்று தலையறுக்கிற காரியம் அவசரமில்லாமல் நடக்கவும், தலைகள் கீழே…




Read more »

நடக்கத் தொடங்கிய, முழுக்கச் சுவரொட்டி பதித்த சுவர்

By |

நடக்கத் தொடங்கிய, முழுக்கச் சுவரொட்டி பதித்த சுவர்

தினை அல்லது சஞ்சீவனி நாவலின் இறுதி அத்தியாயத்திலிருந்து. திண்ணை இணைய இதழில் பிரசுரமாகிறது. புத்தகமாக இந்த நாவல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பாக வெளியாகியுள்ளது விடிந்தபிறகு தான் கரப்புகள் எவ்வளவு அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. கிட்டத்தட்ட முழு இனப் படுகொலை. அரசாங்கத்தில் வெவ்வேறு நல்ல பதவிகளில் இருக்கும் மூத்த, நிறம் மங்கிய கருப்புகள் அரண்மனை வாசலில் பழைய மோட்டார் வாகனங்களின் சக்கரங்கள் முன்னும் பின்னும் நகர நசுக்கப்பட்டு ரத்தவாடையோடும் தசை நாற்றத்தோடும் தெரு முழுக்க அங்கங்கே சாணகம்…




Read more »

பொது யுகம் 300 தேடிச் சென்றடைந்த பொது யுகம் 5000 மக்கள்

By |

பொது யுகம் 300 தேடிச் சென்றடைந்த பொது யுகம் 5000 மக்கள்

தினை அல்லது சஞ்சீவனி நாவல் அத்தியாயம் 43 தற்போது திண்ணை இலக்கிய இணைய இதழில் பதிப்பிக்கப் பட்டுல்ள்ளது. அதிலிருந்து ஒரு சிற் பகுதி. தினை அல்லது சஞ்சீவனி நாவல் அச்சுப் பதிப்பாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் ஜனவரி 2023 பிரசுரமானது வானம்பாடியின் பயோ தொலைபேசி உள்ளங்கையில் அழைத்தது. காலை நான்கு மணிக்கு குழலனின் அழைப்பு அது. அவனோடு பேசாமல் இரண்டு நாட்கள் அவளுக்கும் குயிலிக்கும் கடந்திருக்கின்றன. எல்லாம் குயிலியும் வானம்பாடியும் ஒரு வாரமாகக் கட்டில் பகிர்ந்து…




Read more »

கர்ப்பூரனின் அதிரடி நடவடிக்கைகளும் பெருந்தேளன் பதவித் துறப்பும்

By |

கர்ப்பூரனின் அதிரடி நடவடிக்கைகளும் பெருந்தேளன் பதவித் துறப்பும்

தினை அல்லது சஞ்சீவனி நாவலின் அத்தியாயம் 42 திண்ணை இணைய வார இதழில் டிசம்பர் 3 2023 தேதி பிரசுரமாகியுள்ளது. அதிலிருந்து ஒரு பகுதி தினை அல்லது சஞ்சீவனி நாவல் அச்சுப் பதிப்பாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது மறுபடி கதவு தட்டும் சத்தம். போய்த் திறந்தால் அரண்மனை சேவகத்தில் இருக்கும் மனுஷர்கள் எல்லோரும் திமிராகப் பார்த்துக்கிட்டு கையை இடுப்பில் வைத்தபடி நிற்க, வாசல் பெருக்குகிறவன் எனக்கு முன்னால் விழுகிறது போல் காரித் துப்புகிறான். வாயைத்…




Read more »