Author Archive

Raathri Vandi – Part 1ராத்திரி வண்டி – குறுநாவல் – பகுதி 1

By |

ராத்திரி வண்டி – குறுநாவல் ’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, ஜுன் 1992-ல் பிரசுரமானது. இந்தக் குறுநாவலின் கதையாடல் பற்றிக் குறிப்பிட வேண்டும். நனவோடை சற்றே மாற்றமடைந்து கதைப் போக்கில் அவ்வப்போது முன்னால் வந்து வந்து போகும் இந்தக் கதையாடல், இதற்கு அப்புறம் எழுந்த என் அரசூர் நாவல்களுக்கான நடையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது, காலமும் ஒரு தூலமான பரிமாணமாகக் கதையில் முன்னும் பின்னும் நகர்ந்து சதா இயங்கிக் கொண்டே இருக்கிறது. என்னை…




Read more »

Vishnupuram ThErthal – Kurunovel – completeவிஷ்ணுபுரம் தேர்தல் – குறுநாவல் – முழுமையானது

By |

விஷ்ணுபுரம் தேர்தல் – குறுநாவல் (இரா.முருகன்) – அத்தியாயம் 1 ’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, செப்டம்பர் 1993-ல் பிரசுரமானபோது இந்தக் குறுநாவலின் தலைப்பு – விஷ்ணுபுரம். நண்பர் ஜெயமோகனின் நாவல் விஷ்ணுபுரம் இதற்குப் பிறகே வெளியானதால் பெயர்க் குழப்பம் ஏற்படவில்லை. எனினும் இப்போது இந்தக் குறுநாவலைச் சற்றே பெயர் மாற்றி இருக்கிறேன். வர இருக்கும் குறுநாவல் தொகுப்பிலும் இந்தப் பெயரில் வெளியாகும். இந்தக் குறுநாவலே ’பயோபிக்‌ஷன்’ வாழ்க்கை வரலாற்று நாவலாக 2005-ல் வாராவாரம்…




Read more »

Vishnupuram ThErthal – Part 8விஷ்ணுபுரம் தேர்தல் – பகுதி 8

By |

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 8 ’நீ தமிழ்நாடு தானே..’ இருபது வருடமாக டெல்லியில் இருக்கிறேன். தமிழ்நாட்டில் எனக்கு என்று அரை அடி மண் கூட இல்லை. இங்கே முன்னீர்காவில் இரண்டு அறை கொண்ட, சுவர்கள் ஈரம் பூரித்து நிற்கிற, கழிவுநீர் தினம் அடைத்துக் கொள்கிற டி.டி.ஏ ஃப்ளாட் இருக்கிறது. பத்திரிகைக்காரன் என்பதால் பிழைத்துப் போ என்று கொடுத்தார்கள். என் மனைவி மராத்தி பேசுகிறாள். பள்ளிக்கூடம் போகிற பிள்ளை, ‘காய்கோ கூப்பிடறே சும்மா.. அப்பன் வெரி…




Read more »

How to conduct a memorial service for Sujathaசுஜாதா நினைவைக் கொண்டாடுவது எப்படி

By |

நாளை மறுநாள் சுஜாதா சார் நினைவு நாள். நான் புதிய தலைமுறை 27-2-2014 இதழில் எழுதியுள்ள கட்டுரை இது (புதிய தலைமுறைக்கு நன்றியோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன்) சுஜாதா நினைவு இரா.முருகன் ————————— திரும்பிப் பார்ப்பதற்குள் சுஜாதா இல்லாத இன்னொரு ஆண்டு கடந்து போய் அடுத்த நினைவு தினம். நாற்பது, நானூறு பேர் கூடி, ஆளுக்கு நாலு சுஜாதா தொட்ர்பான சம்பவங்கள், திமலா சிறுகதை விசேஷம், சுஜாதா இல்லாத எந்திரன் சினிமா என்று பேசி, ஒரு நிமிடம்…




Read more »

Vishnupuram ThErthal – Part 7விஷ்ணுபுரம் தேர்தல் – பகுதி 7

By |

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 7 இன்று மீன் ஒலிபரப்பு இல்லை. சாயந்திரம் ‘பரிபாலய ரகுராமா’ இல்லை. டாக்டர் வீட்டில் இருந்து அழுகை சத்தம். ‘நீ என்ன காப்பி கொண்டு போறது.. நான் சாதம் போட மாட்டேனா.. எங்கேயோ ஒழியறேன்… எல்லாரும் சௌக்கியமா இருங்கோ.. சந்தி சிரிச்சா என்ன போச்சு?’ டாக்டர் வீட்டு மாமி குரல் தான். மாமி விடுவிடுவென்று படி இறங்கிப் போனாள். ‘அம்மா..’ வீரபத்ரன் பின்னாலேயே ஓடினான். ‘விடுடா வீரபத்ரா.. நெட்டூருக்கு நிலத்தைப்…




Read more »

Vishnupuram ThErthal – Part 6விஷ்ணுபுரம் தேர்தல் – பகுதி 6

By |

விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 6 நான் உள்ளே நுழைந்தபோது, வீட்டுக் கூடத்தில் மெகருன்னிஸா. இப்படிச் சுவரில் சாய்ந்து கொண்டு, காலை நீட்டிக் கொண்டு தொடர்கதை படிப்பதை அசன் ராவுத்தர் பார்த்தால் தொலைந்து விடுவார். அம்மாவுக்கு அவள் என்னமோ செல்லம். நித்தியப்படிக்கு மதியம் இங்கே தான். அம்மாவுக்கு எம்பிராய்டரி தெரியும். அதைக் கற்றுக் கொள்ள வருவதாகச் சாக்கு. ’நீங்க வச்ச மைசூர் ரசம் ரெம்ப நல்லா இருந்திச்சு மாமி… இவஹளே பூராக் குடிச்சுட்டாஹ..’ என்று அக்பரின்…




Read more »