Author Archive

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 3

By |

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 3

டைப்ரைட்டர் சத்தம் நின்றது. இரண்டு அத்தியாயம் முடிந்த சந்தோஷத்தோடு வைத்தாஸ் எழுந்தான். அவனுடைய எட்டாவது ஆங்கில நாவல் கர்கடக மழையில் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு ஆரம்பித்திருக்கிறது. கர்கடகம். மெல்ல சொல்லிப் பார்த்தான். சரியாக வருகிறது. நந்தினி, எழுந்திருக்கலியா? கட்டில் பக்கம் போய்க் குனிந்தான். உஷ்ணமேறிய கரங்கள் போர்வைக்குள்ளிருந்து நீண்டு கழுத்தைச் சுற்றி அணைத்து, வலுவாக இழுத்தன. கர்கடகம் மட்டும் போதாது. மற்றதும் வேணும். மறுபடியும். நந்தினி சிணுங்கினாள். ஞாயிற்றுக்கிழமைக் காலை போகத்தோடு விடிகிறது. நான் எம்..எம்பிரா…..




Read more »

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 1

By |

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 1

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 1 (காவ்யா இலக்கியக் காலாண்டிதழ் அக்டோபர் – டிசம்பர் 2014) இரா.முருகன் குறிப்பு ——————- பிரபலமானவர்களோடு பிரயாணம் போவதில் கொஞ்சம் கஷ்டம் உண்டு. நிச்சயம் அவர்களால் நமக்குக் கஷ்டம் கிடையாது. நாமும் அவர்களைத் துன்பப் படுத்துவதை மனதில் கூட நினைக்க மாட்டோம். ஆனாலும் ஆயிரம் ஜோடிக் கண்கள் அந்தப் பிரபலத்தின் மேல் நிலைத்திருக்க, கூட நடக்கிற, உட்கார்கிற, ரவா தோசை சாப்பிடுகிற, பேசுகிற, கேட்கிற நமக்கு சடாரென்று ஒரு பயம்….




Read more »

Chaavadi – Stage play – excerpts – 1சாவடி – மேடை நாடகம் – சில பக்கங்கள் – 1

By |

<!--:en-->Chaavadi – Stage play – excerpts – 1<!--:--><!--:ta-->சாவடி – மேடை நாடகம் – சில பக்கங்கள் – 1<!--:-->

எம்டன் போர்க் கப்பல் சென்னை துறைமுகத்தில் குண்டு போட்டது செப்டம்பர் 22-ம் தேதி 1914-ம் ஆண்டில். இந்த ஆண்டு எம்டனுக்கு நூறு ஆண்டு! இதைக் கொண்டாட கிட்டத்தட்ட 100 நிமிடம் நிகழும் ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறேன். 1914-ல் கொத்தவாசல் சாவடியை முக்கிய நிகழ் களனாகக் கொண்டு நடைபெறும் நாடகம் இது. பெயர் ‘சாவடி’ (கொத்தவால் சாவடி). நாடகத்தை செப்டம்பரில் நிக்ழத்தினால் எத்தனை பேர் பார்க்க ஆர்வமாக உள்ளனர் என்று அறிய ஆவல். மற்ற தமிழக நகரங்களிலும் ஆர்வலர்…




Read more »

Raathri Vandi – Part 3ராத்திரி வண்டி – பகுதி 3

By |

ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 3 தேசிகர் ஒடுக்கத்தில் இருக்கிறார். வெளியே ஓதுவார்கள் சத்தம் போட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இது வழக்கமான தேவாரப் பண் இல்லை. இங்கிலீஷ் மோஸ்தரில் கட்டிய பாட்டு… ’துங்கஞ்சார் தருதுரைசை யில்வளர் சுப்பிரமணிய தயாநிதியே…’ அலையில் மிதக்கிற படகுபோல, பெங்குவின் பறவைகள் கூட்டமாக அடியெடுத்து வைக்கிறது போல், தோய்த்து உலர்த்திய காவித் துணிகள் காற்றில் பறந்து அலைக்கழிவது போல… காதிலே ஜவ்வந்திப் பூ வைத்து, கூரை வேய்ந்த மண்டபம் அதிரக் குதித்துக்…




Read more »

Meha santhoshamமேக சந்தோஷம்

By |

(தி இந்து தமிழ் இதழில் 25.2.2014 இதழில் வெளியானது) ஆதியில் இனியாக் இருந்தது. 2,000 சதுர அடி இடத்தில் 18,000 மண்டை வால்வுகளை அடுக்கி, இணைத்து உருவாக்கிய கணிப்பொறி அது. 10 இலக்க எண்களை நினைவில் வைத்துக் கூட்டிக் கழித்து, அந்த முதன்மை (மெயின் ஃப்ரேம்) கணிப்பொறி 1940-களில் அமெரிக்க சர்க்கார் கணக்குகளைப் போட்டது. “இனியாக் போல இன்னும் 10 முதன்மைக் கணிப்பொறிகள் போதும், உலகக் கணக்கு வழக்குகளை யெல்லாம் போட்டுவிடலாம்” என்ற அறிவியல் ஆரூடம் பொய்யானது…




Read more »

Raathri Vandi – Part 2ராத்திரி வண்டி – பகுதி 2

By |

ராத்திரி வண்டி இரா.முருகன் பகுதி – 2 ’அசிங்கமாப் படம் போட்டிட்டிருக்கார் சார்.. இங்கே கொஞ்சம் வாங்க..’ புக்கிங் கிளார்க் ராமசாமி குரல் முன்னால் வந்தது. அப்புறம் சங்கடமாகச் சிரித்துக் கொண்டே கலாசி கணபதி. பெஞ்சில் யாரது? அவன் கொஞ்சம் வித்யாசமாகத் தெரிந்தான். பிடிவாதம் பிடிக்கும் குழந்தையைப் போல் நாக்கைத் துருத்திக்கொண்டு சிமெண்ட் பெஞ்சின் விளிம்பில் தொக்கினாற்போல் உட்கார்ந்திருந்தான். முன்னால் விரித்து வைத்த பலகை. ஒரு முப்பது வயது. அழுக்கு கதர் ஜிப்பா. தலை காடு. பெஞ்ச்…




Read more »