Author Archive

அச்சுதம் கேசவம் – நாவல் கதையாடல்

By |

அச்சுதம் கேசவம் – நாவல் கதையாடல்

அச்சுதம் கேசவம் நாவல் கிட்டத்தட்ட முதற்பாதி முடிந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. அரசூர் வம்சம், விஸ்வரூபம் என்ற இதற்கு முந்தைய ‘அரசூர் நாவல்கள்’ இரண்டிலும் இல்லாத சற்றே மாறுபட்ட கதையாடல் அச்சுதம் கேசவம் புதினத்தில் கையாளப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட கதை இழைகள் மற்ற இரண்டிலும் உள்ளது போல இதிலும் உண்டு. எனில், ஒவ்வொரு இழையிலும் அவ்வப்போது நிலவும் காலத்தின் ஒரு சிறு பகுதிக்கான நிகழ்வு விரிவாகச் சொல்லப்பட்டு ஒரு implied sequencing நிலைநிறுத்தப் படுகிறது. ’தியூப்ளே வீதி’ பயோபிக்‌ஷன்-நாவலில்…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 40 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம்           அத்தியாயம் 40            இரா.முருகன்

விடியும் நேரத்தில் சங்கரன் அரசூருக்கு வந்தான். வீடு பூட்டி இருந்தது. மருதையன் மாமா வாக்கிங் போயிருப்பார். வசந்தியின் கைப்பையைத் திறக்கச் சொல்லி சாவியை வாங்கிக் கதவைத் திறந்தான் அவன். சதா சுத்தமாக வைத்திருந்து, எப்போது வந்தாலும் உடனே குடித்தனம் நடத்தத் தயாராக வீடு. கூடத்தில் ஊஞ்சல், மாடப்புரையில் அகல் விளக்கு, உள்ளறையில் முகம் பார்க்க உயரமான நிலைக் கண்ணாடி, ரேழியில் கடியாரம் என மனதுக்கு இதமாக நிறையும் இல்லம். மருதையன் மாமாவுக்கு எல்லா நன்றியும் நமஸ்காரமும் உரியதாகட்டும்….




Read more »

புதிய நாவல்: அச்சுதம் கேசவம் அத்தியாயம் 39

By |

புதிய நாவல்: அச்சுதம் கேசவம்          அத்தியாயம் 39

கொட்டும் முழக்கும் சீராகக் கேட்டபடி இருந்த கோவில் பிரகாரத்தில் சங்கரன் கால் வைத்தான். ராத்திரி பத்து மணி கழிந்து சுவர்க் கோழிகள் ஒலிக்கும் இருட்டு வெளி. பாட்டு சத்தம் வழிகாட்ட இடது புறம் திரும்பி நடந்தான் அவன். கூடவே ஒரு சத்தமும் இல்லாமல் வசந்தி போனாள். ஓசை அதிகமானதாகத் தோன்றியதால் வெளிவீதியில் வரும்போதே சற்று நின்று காலில் கொலுசை அகற்றிக் கைப்பையில் போட்டுக் கொண்டிருந்தாள் அவள். என்ன அங்கே நடக்கறது? தாடியும் கருப்புத் துண்டுமாக வேட்டி மடித்துக்…




Read more »

புதிய நாவல்: அச்சுதம் கேசவம் அத்தியாயம் 38 இரா.முருகன்

By |

புதிய நாவல்: அச்சுதம் கேசவம்      அத்தியாயம் 38              இரா.முருகன்

ஏர்போட்டுக்கு நான் கூட்டிப் போறேன். கார் வைத்திருந்த எல்லா நண்பர்களும் சங்கரனை விமான நிலையத்துக்குக் கூட்டிப் போவதில் ஆர்வம் காட்டினார்கள். என் டிரைவரை வரச் சொல்றேன் உங்க வீட்டுக்கு. எப்பக் கிளம்பறேன்னு மட்டும் சொல்லு. பிடார் ஜெயம்மாவுக்கு கார் ஓட்டத் தெரியாவிட்டாலும் சிநேகிதம் பெரிய விஷயம். அதுவும் சங்கரனை விட வசந்திக்கு ரொம்பவே வேண்டப் பட்டவள். வசந்தியும் சங்கரனும் விளக்கை எரிய விட்டுக் கொண்டு படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து, எல்லா வாய்ப்பு வசதிகளையும் அலசி ஆராய்ந்து, ஜெயம்மா…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 37 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம்  : அத்தியாயம் 37    இரா.முருகன்

அவ்வளவு பெரிய மனுஷராயிட்டோமா? வசந்தி கேட்டாள். காசு கொழுத்துடுத்தா? வெர்கீஸ் தாடையைச் சொறிந்து கொண்டு விசாரித்தான். மதராஸி லாட்டரி பம்பரா ஏதும் அடிச்சுதா? மேல்மாடி குடித்தனத்து குர்னாம்சிங் கிண்டினான். கொட்டு கொட்டுன்னு ஆகாசத்திலே இருந்து காசு கொட்டுதாக்கும். எனக்கும் கொஞ்சம் கொடுங்க சார். ஒய்ட் லக்கான் கோழி வாங்கி வளர்க்கறேன். ஒவ்வொரு முட்டையிலேயும் உங்க பேர் தான் எழுதி இருக்கும், ஆமா. ஆபீசில், பகல் சாப்பாடுக்கு முந்திய மதிய தரிசனமாக, உடம்பு வாடையடிக்கும் சிகப்பு ஸ்வெட்டர் களைந்து,…




Read more »

காளத்தி கடை வெண்பாக்கள்

By |

காளத்தி கடை வெண்பாக்கள்

மயிலை காளத்தி கடை ரோஸ்மில்க் பற்றி மந்தவெளி மோகனரும், மாம்பலம் முருகனும் வெண்பா அன்பு – அம்பு விட்டுக் கொண்டது யாதெனில் – காளத்தி கடை வெண்பாக்கள் (சற்று முன் வந்த மூன்றாவது, நான்காவது உட்பட) “மூளத்தீ கோடையாய், முப்புரத்தை வென்றபின்பு, காளத்தி நாதர் கடைகலந்த , -பாலொத்த, ரோஸ்மில்க் அருந்த ரகசியமாய் சென்றாராம், ஜுஸ்ஜில் ஜலபுராணம் ஜோர்”….கிரேசி மோகன்…. ———————————————————- அசுரர்க் களித்தாய் அரவுக்கும் வார்த்தாய் பசுமேய்த்த கோனார் ருசித்தார் விசுவனே தாளில் பணிந்துனக்குத் தந்தோம்…




Read more »