Author Archive

எல்லாத் திசையும் இழுபட்டுக் கன்று போல கொண்டு செலுத்தப்படும் மகாராஜா

By |

எல்லாத் திசையும் இழுபட்டுக் கன்று போல கொண்டு செலுத்தப்படும் மகாராஜா

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது -அடுத்த சிறு பகுதி\ மகாராஜா இங்கே வர உத்தரவாகணும்.   பனியன் சகோதரர்கள் அவசரமாக விளிக்க, அவர்களைப் புறக்கணித்து ஒய்யாரமாக உள்ளே நடந்தார் ராஜா. சந்தோஷமாக கருப்புச் சால்வை போர்த்திக் கொண்டு கிழவனும் போனான்.  அவசரமாக வேடமணிந்து ஆட வந்த தெருக்கூத்துக் கலைஞர்கள் போல ரெண்டு பேரும் தெரிந்தார்கள்.   நாடகக் காரங்க தானே? அந்த வரிசை.   வாசலில் நின்று கைக்குட்டையில் புதைத்துப் பிடித்து பீடி…




Read more »

என்ன ஏது என்று தெரியாமலே கொட்டகைக்குள் புகுந்து புறப்பட்ட அரசூரார்

By |

என்ன ஏது என்று தெரியாமலே கொட்டகைக்குள் புகுந்து புறப்பட்ட அரசூரார்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி அவர் பார்வை பனியன் சகோதரர்களைத் தீய்க்க அவசரமாகத் தேடத் தெரு வளைந்து வலது வசம் திரும்பி மேற்கு திசையில் நீளும் வீதியில், வாசலில் கூரைக் கொட்டகை போட்ட கட்டிட வாசலில் அவர்கள் நின்றிருந்தார்கள்.   மரமேஜை போட்டு அங்கே நாலைந்து பேர் உட்கார்ந்து காகிதங்களைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்னால், ஒருத்தன் பிருஷ்டத்தை ஒட்டி அடுத்தவன் என்ற கணக்கில் சர்ப்பமாக வளைந்து மனுஷர்கள்…




Read more »

வேட்டி தார்பாய்ச்சிக் கட்டிய மல்லர்கள் எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்திய போது

By |

வேட்டி தார்பாய்ச்சிக் கட்டிய மல்லர்கள் எண்ணெய்க்  காப்பு உற்சவம் நடத்திய போது

உடம்பு சொடுக்கெடுத்து விட்டது போல் இருந்தது. ராஜாவுக்கு நடக்க நடக்கக் கம்பீரம் கூடிக் கொண்டு வந்ததேயல்லாமல் இம்மியும் அது இறங்கவில்லை.  மணக்க மணக்க எல்லாத் தைலத்தையும் சுடச் சுடக் கலந்து உடம்பெங்கும் நீவி நாலைந்து ராட்சதர்கள் மரியாதையோடு உடம்பு பிடித்து விட்டு எதிர்பார்க்காத நேரத்தில் அவரைப் புரட்டிப் போட்டு முதுகில் ஏறி நின்று திம்திம்மென்று குதித்துக் கும்மாளமிட்டு இறங்கிப் போக எழுந்து உட்கார்ந்தது முதல் உடம்பில் ஒரு வலி, நோவு, பலகீனம் எதுவுமில்லாமல் போனது. அபீசீனியாவில் இருந்து…




Read more »

வாசலில் ஜிலேபி பிழிந்ததுபோல் எழுதி வைத்திருந்தது தான் பிழிச்சலா?

By |

வாசலில் ஜிலேபி பிழிந்ததுபோல் எழுதி வைத்திருந்தது தான் பிழிச்சலா?

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவதில் இருந்து அடுத்த சிறு பகுதி கூம்பு கூம்பாகப் பிடித்துக் கூரை வைத்த இந்த மரக் கட்டிடம் தான் இந்த பூமியிலே கோவில்னு கூட எனக்குத் தெரியாமப் போச்சே என்று ராஜா உள்ளுக்குள் மருகினார். அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அம்பலம் எப்போதும் அரண்மனையிலேயே சுக்குத் தட்டிப் போட்டு வெந்நீர் குடித்துப் பிருஷ்டத்தில் தட்டித் தட்டி வயிற்றில் இருந்து வாயு இறங்கிக் கிரமமாகக் கழிக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டு, முன்னோர்களுக்கு சாராயமும்…




Read more »

மிதக்காமல், கௌரவமான தோரணைகளோடு பாதிரியார் நடை நடந்து போனவர்

By |

மிதக்காமல், கௌரவமான தோரணைகளோடு பாதிரியார் நடை நடந்து போனவர்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காம் நாவல்     ராஜா பரிவாக கிழவனைப் பார்த்துப் புன்சிரிக்க, அவன் கழுத்தைச் சுற்றி லேஞ்சி ஒன்றை சாவகாசமாகக் கட்டிக் கொண்டு நம்மூர் மேளம் வந்திருக்கு, பாத்தியா மாப்பிள்ளே என்று உற்சாகமாக ராஜாவை விசாரித்தான்.   அது சாவு மேளமாச்சே மாமா, உங்க சாவுக்கு அடிச்சு முழக்கினது தானே?   சாவா? எனக்கேது அதெல்லாம்?   கிழவன் வீம்பாகக் கேட்டு மிதக்க ஆரம்பித்து, இங்கே காலை…




Read more »

ஆவி போனாலும் ஆசை போகாத காலப் பயணி ஒருவர் அலைந்த கதை

By |

ஆவி  போனாலும் ஆசை போகாத காலப் பயணி  ஒருவர் அலைந்த கதை

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது அதிலிருந்து அடுத்த சிறு பகுதி ]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]] ராஜா முந்திக் கொண்டு தான் ஏன் அங்கே இருக்கிறேன் என்பதற்கு யாரும் கேட்காமலேயே காரணம் சொன்னார். கிழவன் எதுக்கு வந்திருப்பான் என்று அவருக்குத் தெரியும். கூட்டத்தில் கலந்து இருக்கப்பட்ட நடுவாந்திர வயசுப் பெண்டுகளிடம் சில்மிஷம் செய்ய இல்லாமல் வேறே எதுக்கு? அவன் உயிரோடு இருந்த காலத்தில் ரெண்டு பேரும் அபூர்வமாக உட்கார்ந்து சீமைச் சாராயம் மாந்திக் கொண்டிருந்த ஒரு…




Read more »