Next  

Next  

  • நின்று நடத்தும் பேச்சுவார்த்தை

    வாழ்ந்து    போதீரே – 4வது அரசூர் நாவலில் இருந்து கொச்சு தெரிசாவாகப் பரிச்சயம் இல்லாவிட்டாலும் இந்த விழிகள் அவனுக்குப் பரிச்சயமானவை. ஒரு வினாடி பார்வையில் பட்டு ஈர்த்து, அவசரமாகப் பின் வாங்க வைக்கும் செழுமையான மார்பும் கூட. குரல் மட்டும் இன்னும் கீச்சென்று இருந்தால் தில்ஷித் கவுரே தான் இவள். தில்ஷித் கவுரை பத்து வினாடியாவது தொடர்ந்து கண் இமையாது பார்க்க முடியும். அமைச்சக அலுவலகத்தில் சங்கரனுக்கு சில படிகள் கீழே உத்தியோகம் பார்க்கிறவள். பார்வை...

  • பாரம்பரிய உடையணிந்த இரு முதியவர்கள் மற்றும் யந்திரம் பற்றிப் பேசவந்த மற்றொருவர்

    காலையில் யந்திர நிர்மாணம் பற்றிப் பேச வந்த முதியவர் எங்கே?   யாரோ வந்து சங்கரனைக் கேட்டார்கள். அந்தக் கேள்வியை பல பேர் கேட்டு விட்டார்கள். தற்காலிக யந்திரம் என்று ஒரு பெரிய செப்புத் தகட்டை விழாப் பந்தலுக்கு அருகே ஒரு மாமரத்தில் இரும்பு ஆணிகள் கொண்டு அவர் அடித்து  நிறுத்தும்போது தான் சுருக்கமாக மழை பெய்தது. ஏழெட்டு மயில்கள் கூட்டமாகத் தாழப் பறந்து திரும்ப வானேறின.   அந்த முதியவரை மட்டுமில்லை, பிரபுத்துவக் குடும்ப உடுப்புகளோடு...

  • அவசரமாகப் புனைய வேண்டிய புது ஆளுமை பிம்பங்கள்

    வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவதாம் நாவல் -அடுத்த சிறு பகுதி ராஜா பிரியத்தோடு விசாரிக்க, நெட்டை பனியன் சொன்னான் –   அதிகாரிக்கு அவர் பொண்டாட்டியோட கல்யாணம் ஆச்சு. இந்தப் பொண்ணுக்கு அவளோட புருஷனோட ஆச்சு.   ஆச்சா? ராஜாவுக்கு ஏனோ ஏமாற்றமாகப் போனது.   பந்தல் உள்ளே இருந்து செண்டை மேளம் அமர்க்களமாக ஒலிக்க, ஆடி ஆடிச் சிரித்துப் போன கிழவன் சத்தம் கூட்டினான் –   மாப்ளே, அது...

  • சர்க்கார் மர மேசைக்கு முன், காலில் விசை வைத்த மாதிரி புட்டு கடலைக்கு குதிக்கும் கூட்டம்

    அவர்கள் பக்கத்து விடுதியில் பசியாறித் திரும்பி வந்தபோது பரிபாடி ஆரம்பமாகப் போகுது என்று ஏகப்பட்ட பேர் அவர்களைப் பந்தலுக்கு  அனுப்புவதில் மும்முரமாக இருந்தார்கள். மரமேஜைக் காரர்கள் முன் ஆக்ரோஷமாகக் கை சுண்டி, இட்டலி மாத்திரம் தானா ஆட வந்தவங்களுக்கு, புட்டு கடலை எங்கே என்று உயர்த்திய குரலில் விசாரித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம் தொடர்ந்து மலையாளத்தில் கோஷம் போட, உள்ளே இருந்து அரசூர் அதிகாரி வந்து சமாதானம் செய்து நாளைக்கு புட்டு கடலையும் கூடவே கோழி முட்டையும்...

  • அதென்ன பரிபாடி?    கூட்டமாகச் சேர்ந்து பாடுவதா?

    வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி ரொம்ப மழை எல்லாம் இல்லே. ரெண்டு நிமிஷம் சாஸ்திரத்துக்குப் பெஞ்சுட்டு ஓஞ்சுடும்.   ஜோசியக்கார அய்யர் நைச்சியமாகச் சொன்னார்.   டெல்லி ஆபீசரைக் கேக்கணும். மத்திய சர்க்கார் பரிபாடி. ராஜ்யத்துக்கு இதிலே ஒண்ணும் தால்பர்யமில்லே.   அதிகாரி தீர்மானமாக அறிவிக்க, உள்ளே இருந்து அந்த அரசூர் அதிகாரி திரும்ப வந்தார். எல்லாத் தரத்திலும் மனுஷர்களை இன்று சந்திக்கும் பேறு பெற்ற சந்தோஷத்தோடு சரி...