Temps de poésie : கவிதை நேரம்

ஏழு வண்ணம் கசிய
அக்ரெலிக் பெயிண்டால்
உள்வாசலில் யாரோ
நிரந்தரமாக வரைந்து வைத்த
ரங்கோலி.
துருத்திய நாக்கு ஈர்ப்பும்
கண்ணில் சிரிப்புமாகச்
சிறுமி அதன் ஓரம்
இழையாய்ப் பொடி தூவி
சின்னக் கோலம் போடுகிறாள்.
அழிய அழியப் போடத்தானே
கோலம்.
12.11.2017

Venpa I shared with K H – 7.11.2017

ஆழ்வார்தம் பேட்டை அருநிதியே நீரின்று
சூழ்வார் புகழ்பாடும் நாயனார் வாழ்க
அகவை அறுபதும் ஆங்கொரு நூறும்
முகவையெம் நண்பா சிற.

ஆழ்வார் நாயனாரானது – ஆழ்வார்ப்பேட்டை கமலஹாசனாருக்கு அறுபத்து மூன்று நிறைந்தது
முகவை – ராமநாதபுரம் (அருகே பரமக்குடி)

After a brisk walk thru the
avenues and criss-crossing roads
for an hour and half,
fatigued and perspiring
you are about to enter
the tiny park for the
last lap of workout.
He pulls up next to you
and enquires.
Do I look like
‘Sir, auto’?
#that_chennai_fretting_n_fuming_moment

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன