Bharathi and Bharathidasan – thank God, no more ‘memoirs’ this yearவிட்டுடுங்க ப்ளீஸ் – பாவம் பாரதி, பாரதிதாசன்

ஒவ்வொரு பாரதி பிறந்த நாளன்றும் அவரைப் பற்றிப் புதுசு புதுசாக நிறையப் படிக்கிறேன். இந்த வருடம் பத்திரிகையில் படித்ததிலிருந்து ‘அறிந்து கொண்டது’ –

1) பாரதி புதுவையில் இருந்தபோது மனைவி செல்லம்மா பாரதியிடம் ஒரு குவளை காப்பி கேட்க, அவர் இல்லை என்று சொல்லியிருக்கிறார். பாரதி கோபித்துக் கொண்டு வெளியே போய்விட்டார்.

2) அப்போது அவரைத் தேடி வீட்டுக்கு வந்த பாரதிதாசன் விஷயம் அறிந்து பாரதியைத் தேடிப் போய் ஒரு டீக்கடை வாசலில் சந்திக்கிறார். அவர்களுடைய முகமதிய நண்பர் நடத்திய கடை அது. சாக்கடை ஓரமாக இருக்கிற கடை.

3) பாரதி ’ரெண்டு டீ’ போடச் சொல்கிறார். பாரதிதாசன் அங்கே டீ குடிக்க விருப்பமில்லாமல் டீயை மறைவாகக் கீழே கொட்டிவிடுகிறார். பாரதி ‘நாமெல்லாம் இங்கே டீ சாப்பிட்டால் தான் ஜாதி ஒழியும்’ என்கிறதுபோல் ஏதோ சொல்கிறார்.

4) பாரதி தன் மகள் வீட்டை விட்டு ஓடி சிங்கப்பூர், மலேயா இப்படி வெளிநாடு போய் அங்கிருந்து ‘மனதுக்குப் பிடித்தவ்ரைக் கைபிடித்து விட்டேன்’ என்று கடிதம் எழுதினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று பாரதிதாசனிடம் சொல்கிறார்.

5) செல்லம்மா பாரதி இல்லாத நேரத்தில் பாரதி, பாரதிதாசனுக்கு வீட்டில் காப்பி போட்டுத் தர அடுப்பைப் பற்ற வைத்து, அதில் காகிதத்தைப் போட்டு எரிக்கிறார். அடுப்பு எரிய கரி, விறகு தேவை, காகிதத்தை எரித்தால் புகை தான் வரும் என்ற அடிப்படை அறிவு கூட அவருக்கு இல்லை.

இப்படியான ‘தகவல்கள்’ அந்த மகா கவிகளுக்கு எந்த விதத்தில் பெருமை சேர்க்கும் என்று தெரியவில்லை.

போதும்.. அடுத்த பாரதி பிறந்த நாள் வரும்வரை பாரதியையும் பாரதிதாசனையும் சும்மா விட்டு வைக்கலாம்.
————————————————————-

நேற்றைய தி இந்து தமிழ் பத்திரிகையில் பாரதியார் ’கர்மயோகி’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையை எடுத்துப் போட்டிருக்கிறார்கள். ‘பாஞ்சாலி சபதம்’ நெடுங் கவிதையில் வரும் மாலை வர்ணனை பாடல்கள் பற்றி அவர் எழுதியது –

//ஸூர்யாஸ்தமன காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன்கூடப் போகிறதில்லை. அப்போது வானத்திலே இந்திரஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்த க்ஷணமிருந்த தோற்றம் அடுத்த க்ஷணமிருப்பதில்லை. //

கீழேயே ‘ஆசிரியருக்குக் கடிதம்’ –
தவிக்கவும்: ஸூர்யாஸ்தமனம், இந்திரஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம், க்ஷணமிருந்த, ஸூர்யாஸ்தமன,….

பாவம் பாரதியார், மன்னிச்சுடுங்க.. இனிமே இப்படி எழுத மாட்டார்.. சொல்லி வைக்கறேன்.

——————————————
பரிவாதினி வழங்கிய திரு.ஏ.கே.சி நடராஜனின் கிளாரினெட் இசை மழையில் நனையாதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள்.

அறுபது ஆண்டு காலமாக சுநாதமாக, கம்பீரமாக ஒலிக்கிற, இதயத்தை இதமாக வருடும் இசை அது. நம்மிடையே இருக்கும் ஒரு பொக்கிஷம் ஏ.கே.சி.

ஒரு காசு செலவில்லாமல், வீட்டுக்குள் அமுத மழை பெய்ய வைத்த பரிவாதினிக்கும், நண்பர் லலிதாராமுக்கும் நன்றி.

————————————————

A good article by Jonathan Jones on pulling down of Lenin statue in Kiev, Ukraine
(in The Guardian)

//This goes to the very heart of what a statue is. No other kind of art is directly associated with power in quite the same way.

Because statues are power, they cry out for acts of lèse-majesté. Even ancient Egyptian statues got vandalised, while Roman emperors often had their marble faces broken by Christians. Artistic excellence is no defence. In 16th-century Bologna a crowd pulled down a statue of the hated Pope Julius II and melted it down to make a cannon – no one cared that it happened to be a masterpiece by Michelangelo.//

http://www.theguardian.com/artanddesign/jonathanjonesblog/2013/dec/09/smashing-statues-sweetest-revenge-protesters-lenin-kiev

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன