Archive For பிப்ரவரி 10, 2018

புது நாவல் : 1975:ஜனாதிபதி பக்ருதீன் அகம்மது அவசரச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டுட்டார். நாட்டில் நெருக்கடி நிலைமை பிரகடனம்.

By |

தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் ஒரு சிறு பகுதி ———————————————————— ‘இன்னிக்கு கவர்மெண்டே இல்லாத நிலைமை சார். மிலிட்டரி டேக் ஓவர் செஞ்சா கூட ஆச்சரியப்பட மாட்டேன்”. சீனிவாசன் அரசியல் பேசிக் கேட்பது இதுதான் முதல் தடவை. ஆபீஸ் விஷயம் பற்றி இல்லாமல் மற்றதைப் பேசிக் கேட்பதும் முதல் முறைதான். லஞ்ச் டேபிளில் சீனிவாசனிடம் நான் கேட்டேன், “சார், காலையிலே கிருஷ்ண அய்யர் பத்தி சொல்லிட்டிருந்தீங்களே, பிரதமரை ஹைகோர்ட் பதவி நீக்கம் செய்திருக்குன்னு, அதாலே நமக்கு என்ன…




Read more »

புது நாவல் : 1975: ”பத்தே நாள்லே நாடே நேர்மையானதாக, சோம்பேறித்தனம் இல்லாததாக, லஞ்சம் இல்லாமல் மாறிடுத்து”

By |

இன்று எழுதியதிலிருந்து, நாவலின் சிறிய பகுதி – 1975 ஜூன் 25, 26 நினைவுகள் பிரான்சிஸ் தங்கராஜ்னு பெயரைச் சொன்னதும் கொஞ்சம் நிலை குலைஞ்சு போயிட்டார்னா பார்த்துக்க போத்தி. சரி, ஏதோ விவகாரமான பயதான்னு நினைச்சிருக்கணும். ஆர்.சியா ப்ராட்டஸ்டண்டான்னு அடுத்த கேள்வி. சிவப்பழமா கழுத்திலே கொட்டை கட்டி, நெத்தியிலே பட்டை அடிச்சு உட்கார்ந்து கல்லாவிலே காசை வாங்கிப் போட்டுக்கிட்டிருக்கிற அவருக்கு ரோமன் கத்தோலிகனா, புராட்டஸ்டண்டா அப்படி ரெண்டு பிரிவு இருக்குன்னே தெரிஞ்சிருக்க நியாயமில்லே. ஆனா நான் யாருன்னு…




Read more »

புது நாவல் : 1975 : கத்திச் சண்டை போடணும்னா ஐநூறு ரூபா கூடப் பிடிக்கும்

By |

இன்றைக்கு எழுதிய அத்தியாயத்திலிருந்து அவருடைய ஜில்பாத் தலைக்கும், மீசை இல்லாத அப்பாவி முகத்துக்கும் ரொம்பவே வித்யாசமான, விஷயம் தெரிந்த பேர்வழியாக இருந்தார் அவர். மேனேஜரும் சட்டென்று விஷயத்துக்கு வந்துவிட்டார். “அது ஒண்ணும் கயிட்டம் இல்லீங்க. நம்ம பசங்க கச்சிதமா செஞ்சு கொடுத்திடுவாங்க. கத்திச் சண்டை போடணும்னா ஐநூறு ரூபா கூடப் பிடிக்கும். டூயட் நாங்க பாடினா இருநூறு. வேறே யாராச்சும் பாடி வாய் அசைக்கணும்னா நூத்தம்பது. உங்க பட்ஜெட் என்ன?” போகிற போக்கில் ஒவ்வொரு வரி வசனம்…




Read more »

ரெட்டி அலையாஸ் மகாலிங்கன் எப்போது ‘சாமி’ ஆனான்? நாவல் விஸ்வரூபம் மதிப்புரை

By |

ரெட்டி அலையாஸ் மகாலிங்கன் எப்போது ‘சாமி’  ஆனான்? நாவல் விஸ்வரூபம் மதிப்புரை

ரூபன் ஜே Ruben Jay எழுதியது : நன்றி EraMurukan Ramasami மூன்று நாள் மாயலோக சஞ்சாரம் த்வ்யமாக இருந்தது. நடேசன்,குஞ்சம்மினி,தெரிசா அப்புறம் அந்த துளுவ பட்டன் எல்லாம் எனக்கு மிகவும் நெருக்கமாகி விட்டார்கள். அந்த மகாலிங்கையன் என்கிற மகானுபாவன் சென்னை வந்த பிறகு நடக்கும் சிங்கம்பட்டி ஜமீன்,கஞ்சா,போலீஸ் தவிர மற்ற எல்லாம் நேர்த்தி,! இது மட்டும் பகவதி கன்னத்தில் விசாலம் வைத்த திருஷ்ட்டி பொட்டு சிறையில் இருக்கும் ரெட்டி@ மகாலிங்கய்யனை தெரிசா பார்க்க வரும்போது ‘ஜேம்சை’…




Read more »